வாழ்வில் வெற்றி பெற சக்திவாய்ந்த மந்திரங்கள் தெரியுமா?

By News Room

இறை மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தியும், பலனும் உண்டு.

 

அதிலும் சில சக்தி வாய்ந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்த வருவதால் அதன் ஆற்றல் பல மடங்காக பெருகும்.

 

உரு ஏற திரு ஏறும் என்பார்கள்.

 

அது போல் மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்து வந்தால் எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் அது தானே சக்தி பெற்று, உங்களை கவசம் போல் இருந்து காப்பதுடன்,  பலவிதமான நன்மைகளையும் வாரி வழங்கும்.

 

அப்படி வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்க சொல்லி வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

வாழ்வில் வெற்றி பெற வேண்டும், எடுத்த காரியங்கள் அனைத்தும் நாம் நினைத்த படியே சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு.

 

இதற்காக அனைவரும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

அதே சமயம் அனைவருக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்து விடுவது கிடையாது.

 

சிலருக்கு எத்தனை முறை முயற்சி செய்தாலும் வெற்றி என்பது பெரும் போராட்டமாகவே இருக்கும்.

 

இப்படி வெற்றி பெறுவதில் பல தடைகளை சந்திப்பவர்கள் சக்திவாய்ந்த 5 மந்திரங்களை தினமும் சொல்லி வந்தாலே போதும்.

 

வெற்றி தரும் மந்திரங்கள் :

 

1. கணேச மந்திரம் :

   ...............................

 

விநாயகப் பெருமான் தடைகளை நீக்கி, வெற்றியை தரக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

 

அவருக்குரிய மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால் வெற்றி மேல் வெற்றி குவியும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

 

" ஓம் வக்ரதுண்ட மஹாகாயே

  சூரிய கோடி சமப்பிரப

  நிர்விக்னம் குருமே தேவ

  சர்வ கார்யேசு சர்வதா"

 

 "கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

  கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

  உமாஸூதம் சோக வினாச காரணம்

  நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்"

 

2. துர்கை மந்திரம் :

 

தங்களின் லட்சியங்களை அடைய வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும்.

 

வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் துர்கைக்கு உரிய சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவது நன்மை தரும்.

 

இந்த மந்திரத்தை தொடர்ந்த சொல்லி வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.

 

"ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே

ஸர்வார்த்த ஸாதகே

ஸரண்யே த்ரயம்பகே கெளரி

நாராயணி நமோஸ்துதே"

 

3. சூரிய மந்திரம் :

 

நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூட, தங்களின் இலக்குகளை எளிதில் எட்டிபிடிக்க சூரிய பகவானுக்குரிய மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

 

"ஓம் கிரணி சூர்யாய நமஹ"

 

4. காயத்ரி மந்திரம் :

 

காயத்ரி மந்திரத்தின் மகிமைகள், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும்.

 

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் இல்லை என்றும், மந்திரங்கள் அனைத்திற்கும் தலையாய மந்திரம் என்றும் இதனை சொல்வதுண்டு.

 

காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தபட்சம் 21 முறை சொல்லி வருவுதால் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

 

" ஓம் பூர்ப் புவஸ் வக

தத்ச விதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீம ஹி

தியோ யோன ப்ரசோதயாத்"

 

5. விஷ்ணு மந்திரம் :

 

விஷ்ணுவிற்குரிய மந்திரங்களை தொடர்ந்து பாராயணம் செய்த வந்தால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எடுக்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

 

"சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்

விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்

லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்

வந்தே விஷ்ணு பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்"

.
மேலும்