வீட்டில் தங்கம் சேர நாராயணி அம்மன் பூஜை

By News Room

ஒரு பவுன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்திற்கு அது இன்று எட்டாக்கனியாக இருக்கின்றது. இருப்பினும் நம் வீட்டில் நடக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தங்கம் அத்தியாவசியமாக இருக்கின்றது. ஆகவே நமக்கு தேவையான அளவு மட்டுமாவது தங்கத்தை சேர்க்க வேண்டும் என்பவர்கள், இந்த அம்பாளை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டாலே போதும். தங்கம் சேர, நம்முடைய அங்கங்கள் எல்லாம் மெருகேற எந்த அம்பாளை எப்படி வழிபாடு செய்வது 

 

அங்கங்கள் மெருகேறுவதற்கு இந்த அம்பாளை வழிபட வேண்டுமா? என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். இந்த அம்பாளை வழிபட்டால் வெறும் தங்கம் மட்டும் நம்முடைய வீட்டில் தங்காது. நம்முடைய உடம்பில் இருக்கும் அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்கும். தீராத நோய்கள் தீரும். உடல் உறுப்புகள் ஆரோக்கியம் பெறும். 

 

*தங்கம் சேர நாராயணி அம்மன் பூஜை:*

 

நாராயணி அம்பாளை வழிபாடு செய்தால் நம்முடைய வீட்டில் நோய் நொடி பிரச்சனை இருக்காது. தீராத வியாதியை கூட தீர்த்து தரக்கூடிய சக்தி இந்த அம்பாளுக்கு உண்டு. அதே சமயம் இந்த அம்பாளை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் தங்கம் சேரும். அடமானம் வைத்த நகைகளை எல்லாம் சீக்கிரம் மீட்டக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலும் தவறு கிடையாது.

 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை வீட்டில் தொடங்குங்கள். வழக்கம் போல வெள்ளிக்கிழமை என்றால் வீடு, பூஜை அறை எல்லாம் சுத்தமாக இருக்கும். பூக்களால் பூஜை அறைக்கு அலங்காரம் செய்திருப்பீர்கள். இந்த பூஜைக்கு கட்டாயம் இந்த நாராயணி அம்மன் திருவுருவப்படம் பூஜை அறையில் இருக்க வேண்டும். அதை சிறிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனுக்கு நாம் சூட வேண்டிய பூ, ஆவாரம் பூ.

 

இந்த ஆவாரம் பூவுக்கும் தங்கம் என்ற பெயர் உண்டு. ஆவாரம்பூ மஞ்சள் நிறத்தில் தங்கம் போலவே ஜொலி ஜொலிக்கும். இந்த ஆவாரம் பூவை, அந்த அம்பாளுக்கு சூட்டி விலக்கு ஏற்றி வைத்து விட்டு வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும், ஆரோக்கியம் பெருகவும் மனதார வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்து வந்தாலே போதும். உங்களுடைய வீட்டில் எந்த கஷ்டமும் வராது.

 

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது கூடவே இந்த ஆவாரம் பூவை சேர்த்து, அம்பாளுக்கு வைத்து இந்த பூஜையையும் செய்ய தொடங்கி பாருங்கள். உங்கள் குடும்பத்தில் பல நல்ல மாற்றங்கள் வரும். பணக்கஷ்டம் தீரும். வருமானம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும்.

.
மேலும்