கந்தசஷ்டி விழா ஏன்?

By saravanan

ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட் களும் கந்தசஷ்டி விழா அல்லது கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

 

இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிப ட்டால் வேண்டியது கிடைக்கும். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம். 

 

ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழி பட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பான் என்பது நம்பிக்கை.

 

🌹மும்மூர்த்திகளின் அம்சம் :

 

🔹முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். 

 

🔹ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.

 

🔹அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். 

 

🔹சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காத்தபடியால் விஷ்ணுவின் காத்தல் தொழிலையும் செய்தார். 

 

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப் பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

 

🌹கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

 

முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த 6 நாட்களை தான்  கந்தசஷ்டி விழாவாக கொண்டாடுவதாக சொல்கிறோம். ஆனால் சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ் டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண் டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

🌹முதல் காரணம் :

 

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மை க்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். 

 

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக் களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப் பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

 

🌹இரண்டாவது காரணம் :

 

கந்தபுராணத்தின் படி, கச்சியப்ப சிவாச்சாரி யார், முருகனின் அருள் வேண்டி ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத் தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தார்.

 

தேவர்களும், அசுரங்களை வெல்லும் சக்தி யை பெற முருகப் பெருமானை நினைத்து 6 நாட்கள் வழிபட்டனர். முருகனும் அவர்களுக் கு அருள்செய்தார். இதனை நினை வுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவா சையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

 

🌹சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

 

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியரு க்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணா ல் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். 

 

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்க ளையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியி டம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

 

🌹தினமும் சொல்ல வேண்டிய முருகன் பதிகம் :

 

🚩"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்கோலப்பா! வானோர் 

கொடிய வினை தீர்த்தருளும்வேலப்பா! செந்தில் வாழ்வே!"

 

🌹விளக்கம் -

 

🔹உன்னை தவிர நம்பி நான் உரிமையுடன் என்னுடைய மனக்குறைகளை சொல்லி முறை யிடுவதற்கும், என்னுடைய வேண்டுத லை நிறைவேற்றி வை என கேட்பதற்கும் எனக்கு யாரும் இல்லை.

 

🔹இனி உன்னை தவிர வேறு யாரிடமும், எந்த தெய்வத்திடமும் சென்று அவர்களிடம் என்னு டைய நிலையை சொல்லி முறையிட போவது மில்லை. 

 

🔹பன்னிரண்டு கைகளை உடையவனே. தேவர்களின் கொடுமையான துன்பத்தை போக்கிய, கையில் வேல் ஏந்திய நாயகனே. 

 

🔹செந்தில் என்னும் திருச்செந்தூர் தலத்தில் குடி கொண்டிருக்கும் எங்களின் தெய்வமே எனக்கு உன்னுடைய அருளை தந்து காத்திட வேண்டும்.

.
மேலும்