கிரஹ தோஷம் போக்கும் ஸ்ரீ பகவத் விநாயகர்!

By Tejas

அனைத்து கிரஹ தோஷங்களையும் போக்கவல்லவர் என்பதால் ஸ்ரீ பகவத் விநாயகர் சிறப்பு வாய்ந்தவராகப் பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

இவர் நெற்றியில் சூரியன், நாபியில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ் கையில் புதன், சிரசில் குரு, இடது கீழ் கையில் சுக்கிரன், வலது மேல் கையில் சனி, இடது மேல் கையில் இராகு, இடது தொடையில் கேது என நவக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

எனவே, இந்த ஸ்ரீ பகவத் விநாயகரை ஒரு முறை தரிசித்தாலே நவக்கிரகங்களையும் தரிசித்த நற்பலன் நமக்கு கிடைக்கும், கிரஹ தோஷங்கள் நீங்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இன்றைய சஙகடஹர சதுர்த்தி நன்னாளில் ஸ்ரீ பகவத் விநாயகரை வணங்கி நலம் பல பெறுவோம் வாரீர்.

இத்திருக்கோவில், கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது.

ஓம் ஸ்ரீ பகவத் விநாயகா நமஹ

.
மேலும்