லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ என்ன செய்யலாம்?

By Tejas

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில வழிமுறைகள் ;

1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

3. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

4. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

5. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.

6. படத்திற்க்கும் கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

7. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம்.

8. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

9. .விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

10. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்

.
மேலும்