சபரி மலை செல்பவர்கள் என்ன கடைபிடிக்க வேண்டும்?

By News Room

திரையரங்குகளில் சினிமா படம் பார்க்க கூடாது கேளிக்கைகளில் பொழுதை போக்கக்கூடாது

 

மதிய உறக்கத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்

 

பயணத்தின் போது செல்பி எடுத்தல் டிக்டாக் போன்றவற்றை தவிர்க்கவும்

 

இருமுடி கட்டுவதையோ பகவான் பூசையறைகளையோ பொது உலக பார்வைக்காக வீடியோ எடுக்கவேண்டாம்

 

தேவையான அளவு பிரசாதங்கள் வாங்குவது போதுமானது

 

குற்றாலம் போகும் பக்தகோடிகள் தேவையற்ற முறையில்   கத்திக்கொண்டு குளிப்பது, ஆடுவது போன்ற கொடுமைகளை செய்ய கூடாது

 

எருமேலியில் பேட்டை துள்ளும்பொழுது பரவச உணர்வில் ஆடுவது போதுமானது பஸ்ஸில் பயணிக்கும் உள்ளூர் பெண்களை பார்த்து கூச்சல் போட்டுக்கொண்டு ஆடக்கூடாது சமிபகாலமாக இந்த கொடுமையெல்லாம் கூட எருமேலியில் நடைபெறுகிறது.

 

வரிசையில் ஏறிக்குதித்து முன்னாடி போனால் பகவான் விருது தரப்போவதில்லை மாறாக கேரள போலிஸ் உங்களை அசிங்கப்படுத்துவது தான் மிச்சம்

 

மலையேற கஷ்டப்படும் குழந்தைகளையோ வரிசையில் அழும் குழந்தைகளையோ தகப்பன் சுவாமிகள் அடிக்கவோ திட்டவோ கூடாது மாறாக உச்சபட்ச கருணையோடு ஒரு தாயாக குழந்தைக்கு தரிசனம் பெற வழிவகை செய்ய வேண்டும். ஒவ்வொரு தாயும் உங்களை நம்பித்தான் குழந்தையை அனுப்புகிறாள்

 

முடிந்தவரை குழு உறுப்பினர்கள் ஒன்றாக பயணித்தால் மைக்கில் நான் தொலைந்துவிட்டேன் சுவாமி வந்து மீட்டுபோங்கள் என்னும் அலறல் சபரிமலையில் குறையும் சுவாமி எதேர்ச்சையாக பக்தர்கள்  கூட்டத்தில் தவறினால் அவர்கள் திரும்பும் வரை பொறுமையாக தேட வேண்டும். கிடைத்தபின் உன்னால் நேரம் விரையம் என கத்தக்கூடாது.

 

சபரிமலை சென்றுவிட்டு நேராக வீடுவரும் ஐதிகம் பழைமைடைந்துவிட்டது பரவாயில்லை ஆனால் நாம் புனிதயாத்திரை செய்தால் பரவாயில்லை ஊட்டி, கொடைக்கானல், பூங்காக்கள் என சபரிமலை பக்தர்கள் வருவது ஏன்? எந்த தார்மீகத்தின் அடிப்படையில் இந்த பயணம் .

 

மலைக்கு போய் தரிசனம் வரை ஐயப்ப பாடல் அதிருது வண்டியில் தரிசனம் முடியவும் சினிமா குத்துபாட்டு அதிருது வண்டியில்

 

சபரிமலை பயணத்தில் குறைவு நிறைவுகள் இருக்கும் அதை பக்தர்கள் கையாளகற்றுக்கொள்ள வேண்டும் அனைவரும் சமம் என்ற நிலையில் பயண உழைப்பு இருக்க வேண்டும் நீ கோடிஸ்வராக இருந்தாலும் பிச்சையெடுப்பவன் கன்னிச்சாமியாக உன்னோடு பயணித்தால் அவன் எச்சில் இலை எடுக்க நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும்

 

பழனி, திருச்செந்தூரில் அரோகரா போடுங்கள் அருகே நிற்கும் யுவ வயது பெண்களுக்கில்லை கர்ப்பகிரகத்தில் இருக்கும் முருக கடவுளுக்கு

 

தயவுசெய்து இருமுடி தலையில் வைத்து கொண்டு மலையேற்றம் சமயம் சிறுநீர் கழிக்க கூடாது

((#இருமுடியை இறக்கி வைத்து விட்டு இயற்கை உபாதைகளை கழித்தபின் கைகால்கள் கழுவிய பின் மீண்டும் தலையில் #ஏற்றவேண்டும்))

 

நிலக்கலிருந்து பம்பா வரையோ பம்பாவிலிருந்து நிலக்கல் வரையோ பஸ்ஸில் பயணம் செய்யும் போது இடத்திற்காக சண்டைபோடாதீர்கள் அனைத்து பக்தர்களும் கால் நோக நடந்திருப்பார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

 

ஒரு மாநில பக்தர்கள்  மற்ற மாநில பக்தர்கள் மொழி, உடை, கலாச்சாரத்தை விமர்சிக்காதீர்கள் யார் தவறு செய்தாலும் தவறை தட்டிக்கேளுங்கள்

 

முடிந்தவரை பயணத்தில் உங்களுக்கு ஆக்கும் உணவைவிட அதிகமாக  ஆக்குங்கள் ரோட்டில் போகிறவனது பசி நிறைந்தால் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு பசியடங்கும் உணவு யாசகம் கேட்பவர் யாராக இருந்தாலும் அவமதித்துவிடாதீர்கள்.

.
மேலும்