லண்டன்- தமிழ்நாடு வரை 30,000 கி.மீ பைக்கில் பயணிக்கும் சத்குரு!

By Senthil

ஈஷா யோகா மையத்தின் நிறுவன தலைவர் சத்குரு,  உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளார். மார்ச் 21ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை துவங்கும் அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். 

இந்தப் பயணத்திற்காக நேற்று கோவையில் இருந்து, விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அப்போது, சத்குரு பேசியதாவது :- 

உலகளவில் மண் வளம் பாதுகாப்புக்காக 'மண் காப்போம்' என்ற இயக்கம் ஆரம்பித்துள்ளோம். இதனால், 192 நாடுகளில், மண் வள பாதுகாப்பு குறித்த கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்க வலியுறுத்த உள்ளோம். இதற்காக, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேசி வருகிறோம்.சுமார் 30 ஆயிரம் கி.மீ., வரை செல்ல உள்ள பைக் பயணத்தில் பல சவால்கள் உள்ளன. 

ஐரோப்பாவில் பனி பொழிய துவங்கி உள்ளது. அரேபிய நாடுகளில் மே மாதம் பயணிக்கும் போது, வெயில் உச்சத்தை தொட்டு விடும்.இந்தியாவுக்குள் நுழையும் போது பருவ மழை ஆரம்பிக்கும்.தவிர, தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் நடக்கிறது. அந்த நாடுகளின் எல்லைகளை ஒட்டிய பகுதிகள் வழியாக பயணிக்க வேண்டிய தேவையும் ஏற்படும். மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முக்கியமான பணியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் தெரிவித்தார்.

.
மேலும்