7ம் இடத்தில் சனி பகவான் இருந்தால் இல்லற வாழ்க்கை?

By News Room

7 -ம் வீட்டில் சனி இருப்பது பெரும்பாலும் நல்ல அமைப்பு இல்லை எனச் சொல்லலாம். அந்தந்த லக்னத்தைப் பொறுத்த பலன்கள் சாதக பாதகமாக அமையும். அதே நேரத்தில் சனி பகவானுக்கு இந்த ஏழாம் இடம். அதிக பலத்தைத் தரும். காரணம் ஏழில் சனி திக்பலம் ..

பாவ கிரகம் எந்த நிலையிலும் எழில் திக்பலம் அடைவது ஒரு சிறப்பான அமைப்பு அல்ல ..

பெண்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் திருமணத்தில் தடைகள், தாமதங்கள், குழப்பங்கள் இருக்கும். வயோதிகமான தோற்றம் இருக்கும்.  இரண்டாம் தாரமாக செல்லக் கூடிய அமைப்பு உண்டு. எந்த முடிவுகள் எடுப்பதிலும் குழப்பம் அடைவார்கள் அடிக்கடி எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.

👉எதையாவது நினைத்து குழப்பம் அடைவதுடன் மற்றவர்களையும் குழப்புவார்கள். முகத்தில் எப்போதும் இனம் புரியாத கவலை நிறைந்த தன்மை இருக்கும். எதையுமே ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். நண்பர்கள், தோழிகள் என்ற நிலையில் எல்லோருடன் ஒத்துப் போகமாட்டார்கள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். கூட்டுத் தொழில் இவர்களுக்கு சரிப்பட்டு வராது.

வேறு கிரக பார்வை பலம் இருந்தால் ஓரளவு வண்டி ஓடும். மறதி, சோர்வு, தனிமை, படபடப்பு, சுயபச்சாதாபம் என கலவையான குணாதிசயங்கள் இருக்கும். இதன் காரணமாக இல்லற வாழ்க்கை நிறை குறைகளுடன் அமையும். கணவன், மனைவி இருவரின் விருப்பங்கள், ஆசைகள் எல்லாம் முரண்பட்டதாகவே இருக்கும்.   ஏதேனும் ஒருவகையில் பங்க பட்டு இருத்தல் அல்லது வேறு ஏதேனும் சுபர் தொடர்பு பலன்கள் மாறும்.

7-ஆம் இடம் என்பது எதிர்ப்பால் இனத்தவர் நண்பர்கள் வட்டாரத்தை குறிக்கும் என்பதால்  தயக்கம், தாழ்வு மனப்பான்மைஇதன் காரணமாக கருத்து வேறுபாடுகள், மன முறிவு, உடல் தளர்ச்சி, இடைவெளி, பிரிந்து வாழ்வது, விவாகரத்து போன்ற சூழ்நிலைகள் உண்டாகும்.ஒரு சிலருக்கு பொது தொண்டில் ஆர்வம், சேவை மனப்பான்மை இருக்கும். அடிக்கடி வாகன விபத்துக்கள், கை, கால் களில் அடிபடுவது போன்றவை ஏற்படும்.

பொதுவாக 7இல் சனி திக்பலம் அடைந்து ஆதிபத்திய. விசேஷம்  இல்லாமல் வேறு எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தசை சிறப்பான அமைப்பு அல்ல ஜாதகரை உயிரை மட்டும் வைத்து விட்டு மற்றதை பிடுங்கி விடும்.  ரிஷப துலா லக்னத்திற்கு   ராஜ யோகாதிபதியான சனி எழில் திக்பலம் அடையும் பொழுது,  தாமத திருமணம்,  ஆதிபத்திய ரீதியாக நல்ல பலனை செய்தாலும் காரகத்துவ ரீதியான சிலர் மன வருத்தங்களை கொடுக்கும். விதிவிலக்கு லக்னாதிபதியுடன் இணைதல், அல்லது பார்வை தொடர்பு போன்றவை, குருவின் தொடர்பு வளர்பிறை பௌர்ணமி சந்திரன் தொடர்பு போன்றவை .

பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்னைகள் வரலாம். அடிக்கடி வழக்கு, கோர்ட்டு என்று அலைவார்கள். வாழ்க்கையில் எந்த வகையிலாவது நீதிமன்ற தொடர்பு ஏற்பட்டு விடும்.. அடிக்கடி பயணங்கள் இருக்கும், பயணத் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பொருட்கள் தொலைந்து போகும். அதனால் பயணத்தின் போது கவனம் தேவை. இடம் மாற்றம் அடிக்கடி இருக்கும். சுப தொடர்பு விதிவிலக்குகள் உண்டு.

பரிகாரம்: சனி ஏழில் திக்பலம் அடைந்த சுபர் தொடர்பு இல்லாமல் ஆதிபத்திய விசேஷமும் இல்லாத நிலையில் தசா நடைமுறையில் இருப்பவர்கள் ..கூடுமானவரை அன்னதானம் செய்தல் நல்லது.

நன்றி:  Kirthika Swaminathan

.
மேலும்