சங்கடஹர சதுர்த்தியின் மகிமை

By News Room

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தருவது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பி றைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உத யமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். 

 

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழை க்கப்படு கிறது. அந்த நாளில் காலையிலி ருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித் த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

 

சதுர்த்தியின் மகிமை:

 

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முரு கப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரை க்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்க mnளிலும் இவ்வி ரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதம் மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரத த்தை உபதேசித்தவர் கண்ணபிரான். 

 

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக் கு கணபதியே இவ்விரதத்தை  சொல்லி அருளினார். பார்வதி பல ஆண்டு க்காலம் இவ்விரதத்தை  மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். 

 

இந்திரன், சிவன், இராவணன் போன்றோ ர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்தி ருக்கி ன்றனர். அனுமன் சீதையை கண்டது தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விர தத்தின் மகிமையால் தான்.

 

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்

உமாஸுதம் சோக விநாச காரணம் 

நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

 

ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு வதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணப ட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. 

 

🌹விநாயகர் எளிமையானவர்.

 

ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள்பாலிப்பவர் ஆனைமுக னை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக் கலாம். மண்ணிலே பிடித்து வைக்கலாம் எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்பு ல் அவருக்கு பிடித்தமானவை. இவரின் அருளை பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

 

ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணா யனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தி யாகும். 

 

விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்தி கள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

 

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறு த்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்க ளில் இருந்து விடுதலை அடையலாம்.  இந்த விரத த்தை கடைபிடித்து அங்கார கன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனு டைய அருளினையும் பெறலாம்.

 

பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங் களில் கூறப்பட்டு ள்ளது. 

 

பாண்டவர்கள் கௌரவர்களை வென்றது ம் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண் டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந் தால் கிடைக்கும். 

 

விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிரு ந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.

 

பின்தவறுக்கு வருந்திய சந்திரன் விநாய கரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலை மீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மை யைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. 

 

சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவித மான இன்னல்களையும் போக்கி, அளவில்லா த நன்மைகளை தரு வதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப் படுகிறது.

 

கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தி ல் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப் பெற்றார். இதையடுத்து, தேய் பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார் விநாயகர் அவரு டைய அபவாதம் நீக்கி, அனுக் கிரகம் செய்தார்.  புருகண்டி முனிவர்’ என்ற ழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. 

 

அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்ப ணம் செய்கி றார். அதனால், பல காலமா க, நரகத்திலிருந்த தன் முன்னோர்களு க்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார்.

 

ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்த பூஜை பலனை இறைவனுக்குச் சமர்ப்பி 

ப்பதே சிறந் தது இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ண ம் தோன்றுகிறது.

 

நாம் செய்த புண்ணியச் செயல்களை இறை வனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மட ங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. புருக ண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடு த்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.   

 

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த வர்க ள் தங்கள் விரதப் பலனை யாருக்கா வது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளா ல் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.

 

சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் காலை க்கடன்கள் முடித்து நீராடி உபவாச ம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராய ணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமா கும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். 

 

இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இய லாத வர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணா மல் இருந்து மாலையில் விநாயகர் ஆலய ங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

.
மேலும்