சனிக்கிழமை ஏன் பெருமாளை வழிபட வேண்டும்?

By nandha

நவகிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார்.

 

சனிக்கிழமை உகந்த நாளாக மாறிய கதை:

ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயத்தமானார். அப்போது எதிரே வந்த நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற.. அப்படியானால் சரி.. ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று, யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக தெரிவித்தார் நாரதர்.

 

நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார்? என்று தெரிந்தும் உன் திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே, என்னை மன்னித்தருள வேண்டும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.

 

என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனிபகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.

 

பக்தர்களின் வேண்டுதல், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்ற இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் வேங்கடவனை வழிபடுவோம்.

 

கடன் பிரச்சனைகள் தீர:

 

சனிக்கிழமை சந்திர ஹோரையில் பெருமாளை தரிசனம் செய்தால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

 

சந்திர ஹோரையில் பெருமாளுக்கு தாமரை பூ அல்லது மல்லிப்பூ மாலையை அணிவிக்க வேண்டும். தாமரைப் பூவை 1, 3, 5 என்ற கணக்கில் பெருமாள் கோவிலுக்கு கொண்டு போய் கொடுக்கலாம்.

 

சனிக்கிழமை மதியம் 12:00 மணியில் இருந்து 1:00 மணி வரையும், இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரையும் சந்திர ஹோரை நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

 

சனிக்கிழமையில் என்ன செய்ய வேண்டும்?

 

தீராத பிரச்சனைகள், தொழிலில் வளர்ச்சி தடை நீங்க சனிக்கிழமைகளில் வஸ்திர தானம் செய்வது சிறந்தது.

 

சனிக்கிழமையில் காகத்துக்கு உணவளிப்பது மிகவும் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. அதிலும் சனிக்கிழமை இதை செய்யும் போது சனி தோஷம் நீங்கும்.

 

சனிக்கிழமைகளில் முழுமுதற் கடவுளான விநாயகரை தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்வது தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விடும்.

 

சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

 

தொழில் முடக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் கோயிலுக்கு நல்லெண்ணையை தானம் செய்வது சிறந்தது.

 

சனிக்கிழமை அன்று பறவைகளுக்கு தண்ணீரும், தானியமும் வழங்குவது முன்ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்.

.
மேலும்