சிவலோகநாயகி உடனாய ஸ்ரீ சிஷ்டகுருநாதர் திருக்கோவில் – திருத்துறையூர்

By Tejas

பாடல் பெற்ற பதினைந்தாவது நடு நாட்டு திருத்தலம் திருத்துறையூர்.

தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருத்துறையூர்.

மேற்கு நோக்கிய சத்யோஜன மூர்த்த திருத்தலம் திருத்துறையூர்.

அம்மன் வடக்கு நோக்கி அருளும் திருத்தலம் திருத்துறையூர். சிவபெருமான் குரு வடிவில் அருளும் திருத்தலம் திருத்துறையூர்.

திருவெண்ணைநல்லூரில் “பித்தா‘ என்று பாடிய பிறகு சுந்தரர் சென்ற திருத்தலம் திருத்துறையூர்.

தென்பெண்ணையாற்றில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த சுந்தரரை அம்மையப்பனாக வயதான கோலத்தில் வந்து அழைத்துச் சென்று காட்சி கொடுத்த திருத்தலம் திருத்துறையூர்.

பிரதோஷ தினத்தன்று நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும்போது நந்திக் கொடி ஏற்றப்பட்ட (தற்போது அவ்வழக்கம் இல்லை, ஆனால் இலங்கையில் இவ்வழக்கம் உண்டு என்கின்றனர்) திருத்தலம் திருத்துறையூர்.

கல்வி ஞானம் வேண்டுவோர் செல்ல வேண்டிய திருத்தலம் திருத்துறையூர்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் குரு வடிவில் அமர்ந்து தீட்ஷை கொடுத்த திருத்தலம் திருத்துறையூர்.

சந்தானக் குரவர்களில் ஒருவரான அருள்நந்தி சிவாச்சாரியார் திரு அவதாரத் திருத்தலம் திருத்துறையூர்.

அருள்நந்தி சிவாச்சாரியார் முக்தி பெற்ற திருத்தலம் திருத்துறையூர்.

காலை 06-00 மணி முதல் மதியம் 12-00 மணி வரையிலும், மாலை 04-00 மணி முதல் இரவு 08-00 மணி வரையிலும் திறந்திருக்கும் திருத்தலம் திருத்துறையூர்.

பண்ணுருட்டிக்கு மேற்கே பத்து கி.மீ, தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருத்துறையூர்.

விழுப்புரம்-பண்ணுருட்டி இரயில் வண்டி மார்க்கத்தில், பண்ணுருட்டி இரயில் நிலையத்திற்கு முந்தைய இரயில் நிலையமமான திருத்துறையூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய !

.
மேலும்