காசிக்கு வரும் பக்தர்கள், கங்கா ஆர்த்தியை ஆர்வத்துடன் தரிசிக்க வருவார்கள். தன்னை தரிசிக்க காசி நகருக்குள் வரும் பக்தர்களுக்குள் காசி விஸ்வநாதர் ஒருநாள், வறியவன் வேடம் எடுத்துக் கொண்டு காசிநகர் முழுவதும் வலம் வந்தார்.
செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, பசிக்கு உணவு கேட்டார். எல்லா வீட்டுக் கதவுகளும் மூடியபடியே இருந்தது.
ஒருவரும் உணவு அளிக்க கதவைத் திறந்து வெளியில் வரவில்லை. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, வீடு வீடாக ஏறி இறங்கினார். அங்கும் யாரும் உணவிட வரவில்லை.
மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்தின் பக்கமாக வந்து அமர்ந்தார் ஈசன். அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதை கண்டு அவரருகே வந்தார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு அவரை சுற்றி சுற்றி வண்ணம் இருந்தன.
அவர் எடுத்து வந்திருந்த பிச்சையை விரித்து வைத்து ஐந்து பாகாமாக பிரித்தார். பங்கு பிரித்த நான்கு பங்கு உணவுகளை நான்கு நாய்களுக்கு உண்ண வைத்தார். மிச்சமுள்ள ஒரு பங்கை அவர் சாப்பிட முனைந்தார்.
அப்போது அங்கு வந்த ஈசன் அவரிடம் எனக்கு, பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழுநோயாளியோ அவர் வாடியிருக்கும் முகத்தை கண்டு, தன் பங்கு உணவை தான் புசிக்காமல் அவருக்கு எடுத்து நீட்டினார்.
ஈசன் அதிர்ந்துவிட்டார்.
நான் யார் தெரியுமா? என்று தொழுநோயாளியிடம் கேட்டார். யாராக இருந்தால் என்ன, முதலில் சாப்பிடுங்கள் என்றார். மீண்டும் ஈசன் அதட்டலாக கேட்டார். நான் யார் தெரியுமா? என்று. தொழுநோயாளி அமைதியாக சொன்னார்.... தெரியும்!, நீங்கள் தான் காசி விஸ்வநாதர் என்றார். இறைவன் மீண்டும் கேட்டார்....... என்னை, உணக்கு எப்படித் தெரியும்?......
தொழுநோயாளியான எண்ணிடமிருந்து அசுத்தமான உணவை என் அழுகிப் போன கைகளால் யார் பெற வருவார்கள்.
கொடுப்பதை பெற்றுக் கொள்ள, இந்த காசி விஸ்வநாதரை தவிர வேறு யாராலும் இருக்க முடியாது! என்றார்.
எல்லா உயிருள்ளும் உயிராக இருக்கும் ஈசனுக்கு, எந்த உயிர்களுக்குள்ளும் வேறுபாடு பார்க்கத் தெரியாது என்பதை அந்த தொழுநோயாளி, தெளிவாக உணர்ந்து இருந்ததினால், ஈசனுக்கு பதிலுரைத்தார்.
ஈசன் மெய்மறந்து நின்றாலும், தொழுநோயாளிக்கு வீடு பேறு அருள, உமாதேவியாருடன் பிரசண்ணமாகும் நிலையெடுக்க மறைந்தருளி காட்சி தந்தார்.
நாம் ஒவ்வொருவரும், ஈசன் மீது பக்தி வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்கிறோம். ஆனால், அந்த பக்தி எல்லையில்லா நிலைகளைக் கடந்த நம்பிக்கையோடு இருக்கிறதா என்று தெரியவில்லை.
அது நம்மில் பெரும்பாலும் அரிதே என்று எனலாம்.
பக்திக்கு எல்லையில்லாத அளவை கடந்தவர்களுக்கே ஈசன், அவரெதில் வந்து நிற்பார். மற்றபடி ஒருவித வணக்கத்தை மட்டும், நாம் செலுத்தி வருவதினால் ஏதோ ஒரு வகையான நிம்மதி மட்டுமே நம்மிடம் வந்து சேர்கிறது.
எனவே, ஈசனை அளவு கடந்த எல்லைகளைத் தாண்டி ஈசனைக் காதலியுங்கள். விடாது ஈசனைத் துரத்துங்கள். தேடுங்கள். உள்ளத்துக்குள் கூட மறைந்திருந்து அருள்வார். விடாதீர்கள். ஈசன்மீது பாடித் துதித்து, உங்கள் முன் ஈசன் வர நாமதான் ஒழுகியழ வேண்டும். ஈசனிடம் அன்பை விதையுங்கள், நம் தேவையை ஈசன் அறிவார். நம் தேவையை நீங்கள் கேட்காதீர்கள்.
பிணியானவைகளுக்காக விண்ணப்பம் வைப்பதை தவிர, நலம் வேண்டி விண்ணப்பம் ஏதும் செய்யாதீர்கள் ஈசனிடம்.
என்ன வேனும் என்று, ஈசன் உங்களிடம் கேட்குமளவிற்கு, நம் பக்தியை ஈசனிடம் காட்டுங்கள். கைதொழுது தரிசனம் செய்யும் ஒன்றினால் மட்டும் ஈசனை நாம் பற்றிவிட முடியாது.
வேறொரு நிகழ்வுக்களுக்கெல்லாம் நீங்கள், தன்னலம் பாராது பணிவிடை செய்வது, தொண்டு புரிவது, இயலானவர்க்கு உதவியாக இருப்பது, சிவாலய உழவாரம் செய்வது, வருமானத்தில் ஒரு கடுகு அளவாவது, பழைய ஆலயங்களில் ஒளிர எண்ணெய் வாங்கி கொடுப்பது, புணரமைப்பாகும் திருக்கோயில்களுக்கு உபயமளிப்பது போன்ற செயல்களால் அது முடியும்.