அருள்மிகு ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோவில். காஞ்சிபுரம்

By Tejas

உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. 

 

சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.

அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய குழந்தை சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம்.

 

இவர் இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார். பிறகு தந்தை சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் .

 

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்.

கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். 

 

நெல்லுகாரர் தெரு,  காஞ்சிபுரம்

.
மேலும்