ஸ்ரீ ஞானானந்தா தபோவனம் கோயில், கள்ளக்குறிச்சி

By Tejas

அருள்மிகு ஸ்ரீ ஞானானந்தா தபோவனம் ( அருளாலயம் ).

 

இயற்பெயர் :

சுப்பிரமணியம்

தத்துவம்

அத்வைத வேதாந்தம்

குரு

சிவரத்ன கிரி, ஆதி சங்கரர்

 

ஸ்வாமி ஞானானந்தா

சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின்போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தலயாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்துக்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.

 

ஒருமுறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி  சிவரத்தின கிரி சுவாமிகள், சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டு வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத்தந்து தீட்சை அளித்து ‘ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். ஞானானந்தர் இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத தவநிலை கைவரப்பெற்றார்.

 

திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூருக்கு அருகே அமைந்திருந்த தபோவனத்தைத் தமது வாழ்விடமாக கொண்டார்.

 

திருக்கோவிலூர் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம்.

.
மேலும்