ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பெருமாள் திருவடிகளே சரணம்!

By nandha

வெள்ளிக்கிழமை தரிசனம்.

குதிரை முகம் கொண்ட மது, கைடபன் எனும் அசுரர்களுக்கு தாங்கள் படைக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதன் காரணமாக படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் இருந்து வேதங்களை திருடிச் சென்று, பாதாள உலகத்தில் மறைத்து வைத்தனர்.

இதனால் உலகில் படைக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கியது. இதன் காரணமாக கவலை அடைந்த பிரம்மா, பெருமாளிடம் முறையிட்டார். இதனால் குதிரை முக அரக்கர்களுடன் போரிடுவதற்காக குதிரை முக வடிவெடுத்து, பாதாள உலகம் சென்று, அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டு வந்தார் திருமால். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இந்த ரூபத்தையே ஹயக்ரீவர் ரூபம் என்கிறோம்.

இவரே சரஸ்வதி தேவிக்கு ஞானத்தை போதித்ததாகவும், கல்வி உள்ளிட்ட கலைகளை அருளும் ஆற்றலை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று ஏலக்காய் மாலை அணிவித்தும், தேன் படைத்தும், புத்தகம், பேனா போன்ற கல்வி தொடர்பான கருவிகளை வைத்து ஹயக்ரீவரை வழிபட கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் தோஷங்கள் விலகி, கல்வி மற்றும் ஞானம் பெருகும்.

ஹயக்ரீவருக்கு படைத்த அல்லது அபிஷேகம் செய்த தேனை குழந்தைகளுக்கு கொடுத்து, ஹயக்ரீவர் மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்ய சொன்னால், குழந்தைகளுக்கு கல்வியில் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை நீங்கும்.

ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம் : ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் :

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே... !!!

.
மேலும்