ஸ்ரீ புஜண்டேஸ்வரர் கோயில், கடலூர், ஆலப்பாக்கம்

By News Room

காகபுஜண்டர் சித்தர் பூஜை செய்த புஜண்டேஸ்வரர் ஆலயம் இது. கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ புனிதவல்லி சமேத ஸ்ரீ புஜண்டேஸ்வர ஸ்வாமி கோவில்.

நந்திகேஸ்வரர் தமது சீடர்களாகிய புஜண்ட மகிரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், சிவபெருமானின் பெருமையை இந்த இடத்தில் தான் உபதேசித்து அருளினார்.

அதன் பின்னர் தான் சித்தர் காகபுஜண்டர் இங்கு சிவலிங்கம் நிறுவி வழிபட்டார் என்பது தல வரலாறு. வல்லவர்.

இவரை வழிபடுவதன் மூலம், நமக்கு நவக்கிரக தோஷங்கள் இருந்தால் விலகி விடும். இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று காகபுஜண்டருக்கும், பகுளா தேவிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது.

புஜண்டேஸ்வரர் முன்பு 21 நெய் விளக்குகள் ஏற்றி சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு, சித்தரையும் வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

கடலூர் - சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்பாக்கம் கிராமம்.  இங்கு தான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

.
மேலும்