ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில், தூத்துக்குடி

By News Room

அருள்மிகு ஸ்ரீ வரகுணவல்லி , வரகுணமங்கைத்  தாயார் உடனுறை ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில்.

 

தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.

திருவரகுணமங்கை என்னும் இத்தலம் தற்காலத்தில் நத்தம் என்றே வழங்கிவருகிறது.

நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படும் நவ திருப்பதிகளில் இரண்டாவதாக சந்திரனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவரகுணமங்கை". தற்போது இந்த ஊர் நத்தம் என்று அழைக்கப்படுகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 

மூலவர் பெயர் : விஜயாசன பெருமாள் (வெற்றி ஆசனத்தில் அமர்ந்த கோலம்)

 

உற்சவர் பெயர் : எம்இடர்கடிவான்

 

விமானம் : விஜயகோடி விமானம்

 

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம், தாமிரபரணி.

 

இங்குள்ள யோக நரசிம்மருக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி, நீராஞ்சனம் சமர்பித்து வழிபடுவது இங்கு சிறப்பம்சம் ஆகும்.

 

திருவரகுணமங்கை (நத்தம்).

 

நத்தம். தூத்துக்குடி.

.
மேலும்