ஸ்ரீ விநாயகப்பெருமானை தொழுது நம் பிரார்த்தனைகளை தொடங்க பூஜைகள் வழிபாடுகள் சிறப்பாக நடக்க நமது பணிகள் செய்ய ,நம் தொழில் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடையவும் ,நமது வியாபாரத்தில் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கவும் நிறைவான வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழவும் இல்லத்தில் எல்லோரும் இன்பமாக சகல க்ஷேமங்களுடன் வாழவும் ,எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி வெற்றி வெற்றி என்று சொல்லும் படிக்கு நம் விநாயகப்பெருமான் நம் கூடவே வந்து வழி நடத்தி திருவருள் புரிவார் ஸ்ரீ விநாயகப்பெருமான் ! நல்லதோர் வாழ்வு நல்ல தொழில் அதில் நல்ல லாபங்கள் தருவார் !வளங்கள் பெருகும் ஸ்ரீ விநாயகப்பெருமான் ! ஸ்ரீ விநாயகப்பெருமான் திருவடிகளே சரணம் மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக் கண்ணுத லுடையோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம். திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் — உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக் காதலால் கூப்புவர் தம் கை அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம் –நல்ல குண மதிகமா மருணைக் கோபுரத்துள் மேவும் செல்வகண பதியைக் கைதொழுதக் கால். கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும் கணபதி யென்றிடக் கரும மாதலால் கணபதி யென்றிடக் கவலை தீருமே. பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே! (சம்பந்தர் தேவாரம்) வானுலகும் மண்ணுலகும்வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்