அருள்மிகு தான்தோன்றி முத்து மாரியம்மன், காட்பாடி

By Tejas

வேலூர் மாவட்டத்தில்  காட்பாடி தாலுக்காவில் தாரா படவேடு பேரூராட்சியில்  அருள்மிகு தான்தோன்றி முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது.

கோயில் நுழைவு வாயிலில் கருப்பண்ணஸ்வாமி கம்பீரமாக காட்சியளிக்கிறார். மதுரைவீரன்   ஐயனார்   போன்ற தெய்வங்களை வழிப்படுபவர்கள்  இந்த பூஜையில் பங்கு கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை 11.30 மணி அளவில் பூஜை ஆரம்பம். நண்பகல் 12.00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

ஆடு கோழி பலியிட அனுமதியில்லை. பலியிடுதல் பாவச்செயல் என்று உயர்திரு. ராஜேந்திரன் ஸ்வாமி ஜி  அவர்கள் தெரிவித்துள்ளார்கள். குலதெய்வத்தின் பரிபூரண அருள் இல்லையேல் எவ்வித பரிகாரங்களும் பயன் தருவதில்லை.              

பச்சைஅம்மன் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது  வாழப்பந்தல் (ஆரணி-செய்யார்) செல்ல இயலாதவர்கள் வழிப்பட்டு கொள்ளலாம். கேரளாவில் உள்ளது போல் சங்கடஹர விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பௌர்ணமிக்கு நான்காவது நாள் மாலை நேரத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி  பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து விதமான சங்கடங்களும் நீங்கிவிடும்.

அறுபடை வீட்டோன் முருகப்பெருமாளுக்கு  கிருத்திகை அன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது.

அகிலம் போற்றும் சிவபெருமானுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் ப்ரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.  அறிந்தும் அறியாமலும் செய்த சகலவிதமான பாவங்களும் நீங்க.  ப்ரதோஷ வழிப்பாட்டில் கலந்து கொள்ளுங்கள்.  

பௌர்ணமியன்று  மாலை நேரத்தில் காக்கும் கடவுளுக்கு சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது   சத்யநாராயண பூஜையில் பங்கு கொள்பவர்களுக்கு சகலவிதமான சௌபாக்யங்களும் கிடைக்கும்.

03  05  07  09  10  தலை கொண்ட  மாரியம்மன் பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்மழை பொழிகின்றார்கள்.                               

ஆந்திரா விஜயவாடாவில் உள்ளது போல் கனகதுர்க்கை அம்மனும் இங்கு பக்தர்களை காத்து அருள் மழை பொழிகின்றார்.   கும்பகோணம் திருக்கருகாவூர்  கர்ப்பரஷாம்பிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைய வழிப்படலாம்.  

குழந்தை இல்லாதவர்கள்  வெள்ளிக்கிழமை அதிகாலை தலை ஸ்நானம் செய்து விட்டு சூரிய உதயம் முன்பு (05.30---05.45 A.M) அம்மன் சந்நிதியில் மடிபிச்சை கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்  தொடர்ந்து 03 அல்லது 05 வெள்ளிக்கிழமைகளில் வருவது கூடுதல் சிறப்பாகும்.

வளைகாப்பு செய்யும் நேரத்தில் புடவை இனிப்பு வகைகள் சீர்தட்டு(07வகை) வைத்து சுகப்ரசவம் அடைய பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்   வளைகாப்பு செய்பவர்கள் (ஞாயிற்றுக்கிழமை மட்டுமே)  முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வளர்பிறை-பஞ்சமி திதியன்று மாலை 05.00 மணிக்கு கலியுக கண்கண்ட தெய்வம் ஸ்ரீவாராஹி அம்மனுக்கு  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. கலந்து கொள்பவர்கள் தங்களுடைய குறைகள் நிவர்த்தி அடைந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதை அனுபவ ரீதியாக உணர முடிகின்றது.

சப்தமாதாக்கள்  தட்சிணாமூர்த்தி  ஆஞ்சநேயர்  வெங்கடேச பெருமாள்  நவக்ரஹங்கள் இருக்கிறார்கள்.

ராகு- தந்தை வழி முன்னோர்கள் கேது- தாய் வழி முன்னோர்கள்   நமது முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நம்முடைய ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் அமர்ந்து இன்ப துன்பங்களை கொடுத்து வருகிறார்கள்  ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டு  துன்பங்களால் பாதிக்க படுபவர்கள்  ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் நடைபெறும் யாக பூஜையில் கலந்துகொண்டு பயன் அடைந்து வருகிறார்கள்.

இங்கு சிவலிங்கம்  ராகு கேது பாம்பு வடிவில் உள்ளது  பக்தர்கள் தங்களுடைய கைகளால்  விநாயகர்  சிவலிங்கம்  ராகு கேது ஆகியோருக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட அனுமதிக்கிறார்கள்.

தேய்பிறை அஷ்டமியன்று  காலத்தை நிர்ணயம் செய்யும். ஸ்ரீ காலபைரவருக்கு  யாக பூஜை நடைபெறுகிறது இதில் பங்கு பெறுபவர்கள் சகலசௌபாக்யங்களை அடையலாம்.

.
மேலும்