திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கிரிவலத்தில் இவ்வளவு சிறப்புகளா !

By News Room

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத #சுயம்புத் #திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். சிவ பெருமான் லிங்க வடிவமாக அல்லாமல் சுயம்புவாக காட்சி தருவது இங்கே தான்.

தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பர். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பவுர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர். 

மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்.

கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி வேலு}ர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைவர்.

நாமக்கல், ஈரோடு, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செல்வார்கள். 

கிரிவலம் வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது. உடனே, தூங்க கூடாது. அது கிரிவல பயனை போக்கிவிடும்.

மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வரவேண்டும். காலணிகளை தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது.

திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. எனவே இந்த மலை சிவவடிவமானது. சிவனை வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும்.

பவுர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோடு மலையை கிரிவலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும். இந்த பௌர;ணமியில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று கடவுளின் அருளைப் பெற்றிடுங்கள். கார;த்திகை நட்சத்திரத்தில் வரும் கார;த்திகை மாத பௌர;ணமியும் மிகச் சிறப்பு வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த கார;த்திகை பௌர;ணமி நாளில் கிரிவலம் மேற்கொள்வது அளவற்ற பலன்களை தரக்கூடியது.

பௌர;ணமி கிரிவலம் :

கார;த்திகை மாத பௌர;ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர;ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது. 

கிரிவலத்திற்கு உகந்த நேரம் :

மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொள்வது உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும்.

இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி உள்ள செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்ப வேலைப்பட்டிற்கு ஒரு சான்றாகக் காட்சி அளிக்கின்றன.

சிவனின் இடப்பாகம் பெற அம்பாள் பூஜித்த லிங்கம், மூலஸ்தானத்திற்குள் உள்ளது. காலை, மதியம், மாலையில் நடக்கும் பூஜையின்போது மட்டும் இந்த லிங்கத்தை அர்த்தநாரீஸ்வரர் அருகில் வைத்து பூஜிப்பர். இந்த பூஜைகளை அம்பிகையே செய்வதாக ஐதீகம். உச்சிக்காலத்தில் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும்.

படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆதிசேஷன், மஹாவிஷ்னு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாவிஷ்னு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார்.

அர்த்தநாரீஸ்வரர் சதயம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக இருப்பதால், இந்நாளில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இவரை வணங்கி வரலாம்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் ஆகிய சிற்ப விநோதங்கள் உள்ளன.

நாகேஸ்வரரின் கருவறை, சிற்ப வேலைப்பாடுமிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாளி மீதுள்ள வீரர்களின் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பங்கள் முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள கலைச்செல்வங்கள் ஆகும்.

.
மேலும்