திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

By Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலம் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணத்தலமாகத் திகழ்கிறது. இது தருமையாதீனத்திற்கு சொந்தமான கோயில்களில் ஒன்றாகும். 

திருக்கடவூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம், சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்தச் சடங்குகளின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர் பக்தர்கள்.

அன்னை அபிராமியம்மை. சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் `தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி `அபிராமி அந்தாதி’ அருளச் செய்த தலம். இங்கு அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அருள்புரிகிறாள்.

இத்தகைய பெருமைபெற்ற இத்தலத்திற்கு வரும் பங்கு மாதம், 27-03-22 ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம்பங்குனி  நடைபெற உள்ளதாக தருமை ஆதினம் செய்தியாளர்ளிடம் தெரிவித்தார்.

.
மேலும்