திருப்பதியில் ரதசப்தமி விழா - 7 வாகனங்களில் ஏழுமலையான் பவனி

By Senthil

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி திருமலையில், கடந்த 2 வருடங்களாக ரதசப்தமி விழா கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்தது. இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால் பக்தகோடிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துவந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ரதசப்தமியையொட்டி முதல் வாகனமாக சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளிய காட்சி. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவமான ரதசப்தமி விழா நேற்று அதிகாலை தொடங்கியது. 

நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்ச வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.

ரதசப்தமி விழாவில் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

.
மேலும்