முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு (சிறைக் கைதி எண் 7640), மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி.அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு'- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
.