"மனசெல்லாம் மார்கழி தான், இரவெல்லாம் கார்த்திகை தான்"- இந்த வரியின் அர்த்தம்? (ஆயுத எழுத்து- நெஞ்சமெல்லாம்)
இது அருமையான பாடல். அழகான பாடல், அழகான மனதுக்கு இனியவரை பற்றிய நினைப்பை கொண்டு வந்து நிறுத்தும் !!!
தமிழுக்கு நன்றி, இந்த பாடலுக்கு நன்றி, இந்த பாடலை எழுதியவருக்கு நன்றி,
பாடலை பாடியவருக்கு....நன்றி :)
நெஞ்சமெல்லாம் காதல் தேகம் எல்லாம் காமம்
இந்த நிலைமை காதலில் வரும் பல நேரம்.. அப்போது காதலனும் காதலியும் எப்படி தன்னை
கட்டு படுத்தி கொள்வது பற்றி மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கு. ஆனால் இதில் சொல்லப்பட்ட கருத்து - பெண்ணின் எதிர்பார்ப்பை தான் ஓரளவாவது அந்த அன்புக்கு அரவணைப்புக்கு இன்பத்தை தர முடியுமா? என்ற தலைவனின் சந்தேகத்தில் அவளோ நான் உன் குற்றம் பார்க்கவில்லை - இது மைய கருத்து கார்த்திகை எப்படி பட்ட மாதம் - அழகர்கள் பிறந்த மாதம்...அழகர்கள் கொண்டாட பட வேண்டிய மாதம்
தமிழுக்கு பிடித்த மாதம்...தமிழ் கடவுளுக்கு உரித்தான மாதம்...கார்த்திகை பெண்கள் முருகனுக்கு
பாலூட்டி சீராட்டி வளர்த்த மாதம்....
கார்த்திகை அருமையான மாதம்....அண்ணா மலையாரின் ஜோதியோ, நரசிம்மனின் சுட்டெரிக்கும் ஜோதியோ, பத்மாவதி தாயாரின் ப்ரஹ்மோத்சவமோ, முருகனின் சுடர் கார்த்திகை தீபமோ, ஐயப்ப தீபமோ...இந்த மாதத்தில் துவக்கம்...
ஆகவே ஜோதி ஏற்றும் - துவங்கி....ஒளி ஏற்றி வைக்கின்றோம்..
தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலத்தில் இன்னுமே கார்த்திகை குளிர் தான்...
நெருப்பு ஏற்ற ஏற்ற ஜோதி...வெளிச்சம்... அந்த நெருப்பு என்ன கொடுக்கும்...பாதுகாப்பு, சூடு...ஒரு குதூகலம்..
மார்கழி எப்படி.? இன்னும் குளிர் உலகம் முழுவதும்....ஆனால் ஏற்கனவே ஏற்றி ஏற்றி கொஞ்சம் சூடு அனுபவித்த கார்த்திகை முடிந்து....இன்னும் சில்லான...மார்கழியில் சப்த நாதமும் ஒடுங்கி ஒரு பேரமைதி கிடைக்கும்...
மேலும் மேலும் கார்த்திகையில் ஏற்றிய சூடு அடங்கி மனசும் உடம்பும் அறிவும் ஆன்மாவும் உணர்வும் குளிர்வது..மார்கழியில்
இது களவியல் கற்பியல் காதலில் காமத்தில் என்ன பொருள் என்றால்...?
இரவு கார்த்திகை போல சூடாக உள்ளது...அந்த புணர்ச்சி இன்பத்துக்கு ஏங்கி கிடைத்து.
அந்த பேரின்பத்தில் இரவில் திளைத்து...அது போன்று இன்னும் இன்னும் வேண்டும் நீ என் அருகில்
என்று அந்த குறிஞ்சி தலைவி (வள்ளி) போல இந்த பெண் அவனிடம் கேட்கிறாள்...
அவனே - சும்மா இருப்பவன் அல்ல...முருகன் போல தலைவன் தான்..அதாவது,,,
அவனே உண்மை சொல்லிட்டான் ரெடி (Ready) தான்...
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் என்கிறான் தலைவன். ஓர் ஆண் அப்படி சொல்லும்போது அதில் இருக்கும் ஆசை வேட்கை வேற லெவல் அப்படி பட்டவனிடம் இவள் எதிர்பார்ப்பு..இப்படி...
அந்த அழகான புணர்ச்சி கனவுகள் நினைத்து நினைத்து குளிர்ந்த...மனசு மார்கழி போல ஜில்லுனு இருக்காம் தலைவிக்கு...!!!
தொக்கி நிற்கும் பொருள் -
தலைவன் சிறந்தவன் (வீரன் காதல் காமம் எல்லாவற்றிலும் சிறப்பானவன் )- நெஞ்சேமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் என்றே சொல்கிறான்.... அப்படிப்பட்டவன் செய்யும் சில பிழைகள் அவளை சந்தோஷப்படுத்தாத குறைகளை இவள் பார்க்கவில்லை
ஆனால் அந்த கூடல் இன்பத்தை யோசிக்க யோசிக்க - கார்த்திகை போல ஏற்றி வைத்த சூடும் ஏறுகிறது.... ஜக ஜோதி போல காதல் மையல் இன்பத்தில் எல்லாம் வெளிச்சமான இரவுகள் என்னும் அழகான கல்யாண கனவுகளை வேண்டிய தலைவி...
அந்த கலவி இன்பம் நடந்து முடிந்ததால்.( தன்னுடைய சிந்தனையில்....) எப்படி இருக்கும் என்று யோசித்து...குளிர்ந்தாள் (அவள் மனசும் உடம்பும் எல்லாமும் )