நடிகை கீர்த்தி சுரேஷ் கதை தேர்வில் முன்பைவிட மிக அதிக கவனம் செலுத்துகிறார்.
நடிகைகளான நயன் தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற நடிகைகளை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க கீர்த்தி சுரேஷ் முடிவெடுத்துள்ளார்.
‘சாவித்ரி’ வாழ்க்கை படத்தில் நடித்து நல்ல பெயர் வாங்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஓடிடியில் வெளியான ’பெண்குயின்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்து ஓடிடியில் வெளியாகவுள்ள ‘மிஸ் இந்தியா’ படமும் கீர்த்தி நடித்ததுதான்.
டீ விற்று பிழைப்பை நடத்தும் ஒரு பெண், பின்பு ஒரு தொழிலதிபராக மாறுவதுதான் இப்படத்தின் கதை.
மேலும் தெலுங்கு மொழியில் ரிமேக் ஆகும் அஜித்குமாரின் ‘வேதாளம்’ படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் நடிக்க உள்ளார்.
கதாநாயகிகளைவிட தங்கையாக நடித்து திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் ஹீரோக்களை காதலிக்கும் கதாபாத்திரங்களை தவிர்த்து, திறமையை வெளிப்படுத்தும் ரோலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் கீர்த்தி!
கீர்த்தியின் திறமைக்கு சல்யூட்!