கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இந்தியிலும் நடித்துள்ளார். 90ஸ் காலகட்டத்தில் கனவு கன்னியாக தென்னிந்திய திரையுலகில் வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல், கார்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
செளந்தர்யா 1976ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள முலபாகிலு எனும் இடத்தில் பிறந்தார். 1992ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கந்தர்வா எனும் படத்தில் அறிமுகமானார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடிக்கத் தொடங்கிய அவர் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார்.
இவர் கமலுடன் காதலா காதலா, ரஜினிகாந்துடன் படையப்பா, சிவாஜி கணேசன், அர்ஜுன் நடிப்பில் வெளியான மன்னவரு சின்னவரு, நவரச நாயகன் கார்த்தியுடன் பொன்னுமணி மற்றும் முத்து காளை உள்ளிட்ட படங்கள், தெலுங்கில் நாகர்ஜுனா மலையாளத்தில் மோகன் லால், ஜெயராம் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தவசி படத்தில் விஜயகாந்த்திற்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.
கார்த்தியுடன் இவர் நடித்த பொன்னுமணி படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல்,
“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி” யாரலும் மறக்க முடியாது.
இவர் 107 படங்களில் நடித்துள்ளார். 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூர் அருகே நடந்த விமான விபத்தில் நடிகை செளந்தர்யா மற்றும் அவரது சகோதரர் அமர்நாத் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அவருக்கு வயது 31 . சௌந்தர்யாவின் 2003ல் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் ரகு என்பவரை திருமணம் செய்திருந்தார். 31 வயதான சௌந்தர்யா இறக்கும்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதை கேட்டு மக்கள் கதறி துடித்தனர்.
வானத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தை நோக்கி பறவைகள் கூட்டமாக வந்ததாகவும் இந்த நிலையில் திசை திருப்புவதற்காக விமானி ஏதோ செய்யப்போக விமானம் விபத்துக்குள்ள தான் ஆகும் தகவல்கள் சொல்லுகினறன.
சந்திரமுகி படத்தின் கன்னட வெர்ஷனான ஆப்தமித்ரா படம் இவரது மறைவுக்கு பின்னரே வெளியானது குறிப்பிடத்தக்கது.
நன்றி: முகநூல் நண்பர்