Breaking News :

Saturday, December 21
.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு 'சிஸ்டர்'


Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது !!  

 

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி திரில்லர்  சிஸ்டர் !

 

திரைப்பிரபலங்கள் வெளியிட்ட  சிஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டர் !!

 

Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்”  எனப்பெயரிடப்பட்டுள்ளது.

 

திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர்  ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர்  சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர்  ஆண்டனி ரூபன் ஆகியோர்  இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். 

 

கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது, 

 

அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.  இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 


 

பெரும் பொருட்செலவில்,  அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுது போக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். 

 

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. 

 

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். 

 

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


 

தொழில்நுட்ப குழு 

 

தயாரிப்பு - பிளேஸ் கண்ணன் (Dwarka Productions)

எழுத்து இயக்கம் - ரா.சவரி முத்து

ஒளிப்பதிவு - தமிழ் A அழகன்

இசை - D இமான்

படத்தொகுப்பு - சரத் குமார்

கலை - சுரேஷ் கல்லேரி

சண்டை - சுகன்

நடனம் - ஷெரிப்

ஒப்பனை - சுரேஷ்

ஆடை வடிவமைப்பு - ஷேர் அலி

உடைகள் - ரமேஷ்

புகைப்படம் - அன்பு

நிர்வாக தயாரிப்பு - நிதின் கண்ணன்

தயாரிப்பு மேற்பார்வை - அழகர் குமரவேல்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

விளம்பர வடிவமைப்பு - சபா டிசைன்ஸ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.