Breaking News :

Saturday, December 21
.

பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?


நடிகர் அஜித்குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தமது படபிடிப்பு தளத்தில்  ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டும், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், பின் அது வைரலாவதும் வழக்கம்.

அந்த வகையில் பைக் ரைடுக்காக லண்டன் சென்றிருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கையில், தனது ரசிகருக்கு தொலைப்பேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, கைப்பட வாழ்த்துக் கடிதமும் எழுதியுள்ள அஜித்தின் வீடியோவும், போட்டோவும் தற்போது பகிரப்பட்டுள்ளது.

அதில், “ஆரோக்கியமா இருங்க, சந்தோஷமா இருங்க. கண்டிப்பா நேர்ல மீட் பண்ணுவோம்” என அஜித் லவனிடம் கூறியுள்ளார். அதுபோக கைப்பட எழுதிய அந்தக் கடிதத்திலும் ”அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதமும், ஆடியோவுடன் கூடிய வீடியோவும் ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித் தனது ரசிகருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் 10-10-2022 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது இணையவாசிகளிடையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ரசிகருக்கான வாழ்த்து கடிதத்தில் அஜித் தேதியை தவறாக குறிப்பிட்டாரா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித்தின் வாழ்த்தை பெற்ற அந்த ரசிகர் லவனின் ஃபேஸ்புக் பதிவில், “என் வாழ்வின் விலைமதிப்பற்ற தருணம் இது. கனவு நனவான உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. என்னுடைய பிறந்த நாளுக்கு முன்கூட்டியே வாழ்த்து கிடைத்துள்ளது. ஒரு வழியாக அவரிடம் பேசிவிட்டேன். இது எனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்” எனக்குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனது ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கான பிறந்த நாள் வாழ்த்தை அஜித் முன்கூட்டியே தேதியிட்டு எழுதியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.