Breaking News :

Saturday, December 21
.

'பன் பட்டர் ஜாம்' டீசர் வெளியீடு!


Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர்  சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்'.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது,விடுதலை 2.  தமிழகமெங்கும் இப்படம் வெளியாகும் 250 திரையரங்குகளில்   “பன் பட்டர் ஜாம்' பட டீசர் இணைத்து வெளியிடப்படவுள்ளது.

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம்.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சைஸ் ஜீரோ, பாரம் படங்களின் திரைக்கதையை எழுதியவரும், காலங்களில் அவள் வசந்தம் பட இயக்குநருமான ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் ராஜூ நாயகனாக நடிக்கிறார், ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை &  V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : Rain Of Arrows Entertainment
எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத்
இசை:  நிவாஸ் K பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபு குமார் IE
எடிட்டர்: ஜான் ஆபிரகாம்
கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்
தயாரிப்பு நிர்வாகி : M.J.பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.