1960... 70 களில், தமிழ் திரைப்பட சாம்ராஜ்யத்தில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர். புராணம். இதிகாசம், வரலாறு, சமூகம் என்ற அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய 'திரைக் காவியங்களை' உருவாக்கியவர்.
1973 ல் அவர் இயக்கி வெளிவந்த 'ராஜராஜ சோழன்', முதல், 'சினிமாஸ்கோப்' திரைபடமாக வெளிவந்து வெற்றி நடை போட்டது. தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு, சோழ வம்சத்து அரசை கோலோச்சிய 'ராஜராஜ சோழனின்' வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட காவியமாக, இதை வடித்திருந்தார்... இயக்குனர் ஏ.பி.என்.
தாங்களே நடித்துப் பேசி, பாடும் வல்லமையைப் பெற்ற டி.ஆர். மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வரலட்சுமி... மூத்த கலைஞர்களான நம்பியார், மனோரமா... அன்றைய இளம் கலைஞர்களான முத்துராமன், சிவகுமார், லட்சுமி... என்ற எண்ணற்ற திறமையாளர்களை முன் நிருத்தி, 'ராஜராஜ சோழ மன்னனின்' வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சரித்திர சம்பவங்களை முத்துக்களாகத் தொகுத்திருப்பார்... ஏ.பி.என்.
திருவாரூர் தியாகராஜ பெருமானின் சந்ந்திதானத்தில், 'நம்பியாண்டார் நம்பிகள்' மூலமாக தேவார ஏடுகளை ஒன்றாகத் திரட்டி, அதை 'திருமுறைகளாக' தொகுத்த நிகழ்வுகளை, வண்ணமயான காட்சிகளாக்கியிருப்பார் இயக்குனர்.
அந்த நிகழ்வுக்கு ஏற்றப்டி, தியாகராஜப் பெருமானாரின் புகழையும், நாயன்மார்களின் புகழையும், ராஜராஜ சோழனின் புகழையும்... தனது வார்த்தைகளால் வடித்து... அதை டி.ஆர். மகாலிங்கம், சீரகாழி கோவிந்தராஜன், எஸ். வரலட்சுமி ஆகியோரின் அமுதக் குரல்களின் வழியாக... வெளிப்படுத்தியிருப்பார், 'கவிஞர்' இது கவிஞர் வடித்த அழியாப் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றாக மலர்ந்தது...
'ஏடு தந்தானடி தில்லையிலே - அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அற நெறி கூட...
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் - அந்த
பாட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் - அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்...
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான் - ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இன்னாள் வரையில்
அவனின்றி எதுவுமே நடப்பதில்லை...
அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே - திரு
அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே - அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலமே !'
இவ்வாறு, திறமை மிக்க கலைஞர்கள அனவரையும் ஒன்றிணத்து உருவாக்கிய திரைப்படங்கள் அனைத்துமே... காவியங்கள்தான்.