அதர்வா நடிக்கும் படத்திற்கு "இதயம் முரளி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு சீசனில் ஒரு தலைக் காதல் வலியை துல்லியமாக ரசிகனுக்கு கடத்திய நடிகர் என்றால் அது முரளி தான். அதே போலான ஒரு தலைக்காதல்'களால்' சோககீதம் பாரும் இளைஞனாக அதர்வா கேரக்டர் இருக்கும் என்று நினைக்கிறேன்.
படத்தின் டைட்டில் அறிவிப்புக்காக 5 நிமிட வீடியோ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவே ப்ரெஷ்ஷாக இருக்கிறது. அதர்வாவுடன், இசையமைப்பாளர் தமனும், விஜய் டிவி ரக்ஷனும் இருக்கிறார்கள்.
நாயகியாக ப்ரீத்தி முகுந்தனுடன், ஸ்டார் தொகுப்பாளினி ஏஞ்சலின் இருக்கிறார். அவர்களுடன் நிஹாரிகா இணைந்திருப்பது தான் சர்ப்ரைஸ். இன்ஸ்டா இன்புளையன்சரான நிஹாரிகா மகேஷ்பாபு, ரன்வீர், யாஷ், ஏ ஆர் ரஹ்மான் என பிரபலங்களுடன் இணைந்து கண்டண்ட் கிரியேட் செய்வார். ரீல்ஸ் உலகில் சூப்பர் ஸ்டாரினி.
கொஞ்சம் தன்னையே கலாய்த்துக் கொண்டு, அசடாக காட்டுக் கொண்டு இவர் செய்யும் ரீல்ஸ்கள் செம்ம ஹிட் ஆகி இருக்கின்றன. அவர் தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமாவார் என்று நினைக்கவில்லை.
இந்த டீமே அட்டகாசமாக இருக்கிறது. தமனின் இசை படத்தை வேறொரு தளத்திற்கு கூட்டிச் செல்கிறது.
அதர்வாவுக்கு நல்லது நடக்கட்டும். அவர் அப்பாவின் ஆசியுடன்.