Breaking News :

Saturday, December 21
.

மாற்றான் காதலியை காதலிக்கும் கதாபாத்திரம்


கிம் கி டுக்கின் Bad Guy (2001) கொரிய திரைப்படம் பார்த்துவிட்டு Darr (1993) படம் மீள் பார்வை பார்த்தேன், எப்படி பிறன்மனை நோக்கும் சைக்கோ வில்லன் கதாபாத்திரமாக மனதில் பதிந்திருக்கிறது இந்த  ராஹுல் மெஹ்ரா கதாபாத்திரம்,  இரண்டு படங்களிலும் ஒரே மையப் புள்ளி பிறன்மனை நோக்குதல், 

மாற்றான் காதலியை அவளை நிழலாக பின் தொடர்ந்து சென்று  காதலிப்பது, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வது, இதன் பின்னணியில் வந்த முக்கியமான திரைப்படங்களை மீள் பார்வை பார்க்கலாம் , கிம் கி டுக் இயக்கிய Bad Guy பயங்கர ஓவர்டோஸ், மகாபாவம்.

திரைப்படத்தில் ஒரு கதாநாயகனை விட எதிர்நாயகனைத் தான் மக்கள் விரும்புகின்றனர்,நல்ல வில்லன் கதாபாத்திரமாக அது அமைந்து விட்டால் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து விடுகின்றனர் ரசிகர்கள்.

Darr 1993 ஆம் ஆண்டு வெளியாகையில், படத்தில் ஷாரூக்கான் நடிப்பு எங்கள் பள்ளியில் பேசுபொருளாக இருந்தது, இறுதிக்காட்சியில் கெட்டவன் சாகையில்  அழுதனர் ரசிகர்கள்.

 

31 வருடங்களாகிறது , இன்னும் ஷாரூக்கானுக்கு இறங்குமுகமில்லை,ஒரு வெற்றி என்றால் இப்படி அசைக்கமுடியாத வெற்றியாக இருக்க வேண்டும்,புலிவால் போன்று பிடித்த இடத்தை தக்க வைக்க தொடர்ந்து உழைக்க வேண்டும்,அதில் நாயகனாக நடித்த சன்னி தியோல் இன்று எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை,

இது போல மாற்றான் மனை நோக்கும் வில்லன் கதாபாத்திரம் செய்பவர்களை மக்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது, கதாநாயகனைவிட வில்லனுக்கே நடிக்க அதிகம் வெளி அமைகிறது, மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் (1980) மளையாள திரைப்படத்தில் இது போல நரேந்திரன் என்ற சைக்கோ வில்லன்  கதாபாத்திரம் செய்த மோகன்லால் எப்படி மக்கள் மனதில் சிம்மாசமிட்டு அமர்ந்துள்ளதை நினைவு கூறவேண்டும்,“Good evening, Mrs Prabha Narendran என்று எதிர்படும் வேளையில் அப்படி ரசிகர்களை கிலியூட்டுவார், கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட மறுநாளே உக்கிரமான க்ளைமேக்ஸ் சண்டையில் நடித்திருப்பார் மோகன்லால், அதன் பிறகும் அதே போன்ற சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தை ஹலோ மெட்ராஸ் கேர்ள் (1983) படத்திலும் செய்தார் மோகன்லால்,இப்படங்களில் கதாநாயகனாக  நடித்த நடிகர் சங்கர் இன்று அரிதாகவே ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.