பராசக்தி.
R. சுதர்சனம்.
C.S.ஜெயராமன்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள்
ஒரு கோடியென்றாலது பெரிதாமோ?
அஞ்சுதலைப் பாம்பென்பான்
அப்பன்
ஆறுதலையென்று மகன்
சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து
விடுவார்
பின்பு நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)
சாத்திரங்களொன்றும் காணார்
பொய்ச்சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தை நம்பியே
கோத்திரமொன்ருந்தாலும்
ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம்
தமைச் சூது
செயு நீசர்களைப் பணிந்திடுவார் -
ஆனால் ஆத்திரங் கொண்டேயிவன்
சைவன் இவன்
அரிபக்த னென்று
பெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)
எண்ணிலா
நோயுடையார்
இவர் எழுந்து
நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல்
பிறர் காட்டிய
வழியிற் சென்று
மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள்
பத்து நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)