இந்தி சினிமாவில் பாடகியா அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு, கன்னடா, மராத்தி பேஜ்பூரி, பஞ்சாபி உள்ளிட் பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ஸ்ரோயா கோஷல்.
இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்கத்தின் முர்ஷ்திபாத் நகரில் பிறந்த இவர், தனது இளம வயதில் ராஜஸ்தானில் குடிபெயர்ந்துள்ளார். இந்திய அணுசக்தி கழகத்தில் பணியாற்றி வந்த இவரது தந்தைக்கு, 1997-ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டபோது, குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.
சரிகம நிறுவனத்திற்கு 75-வது குழந்தைகள் நிகழ்ச்சியில், ஸ்ரேயா கோஷலின் பாடலை கேட்ட பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக சஞ்சய் லீபா பஞ்சாலி, இவரிடம் தனித்திறமை இருப்பதை அறிந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். 2002-ம் ஆண்டு சஞ்சய் லீலா பாஞ்சாலி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான தேவதாஸ் படம் தான் ஸ்ரோயா கோஷல் இந்தியில் பாடகியா அறிமுகமான முதல் திரைப்படமாகும்.
தேவதாஸ் படத்தில் 4 பாடல்களை பாடியிருந்த ஸ்ரோயா கோஷல், அடுத்தடுத்து இந்தியில் வெளியான பல படங்களில் பாடல் பாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார். தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் பாடல்கள் பாட தொடங்கிய ஸ்ரோயா கோஷல், கடந்த 2002-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் படத்தில் ‘’செல்லமே செல்லம் என்றாயடி’’ என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.
தொடர்ந்து சொல்ல மறற்நத கதை, பிதாமகன், தென்றல், விருமாண்டி, அந்நியன் உள்ளிட்ட பல படங்களிலும், இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு தமிழில் பாட தொடங்கிய ஸ்ரோயா கோஷல், 200-க்கு மேற்பட்ட பாடல்களை படியுள்ளார். சமீபத்தில் வைபவ் நடிப்பில் வெளியான ரணம் படத்தில் பாடியிருந்தார்.
அந்த வகையில் ஸ்ரோயா கோஷலின் குரலில் தமிழ் வெளியான டாப் 5 பாடல்களை இங்கு பார்க்கலாம்.
செல்லமே செல்லம் (ஆல்பம்)
இயக்குனர் வசந்தபாலன் இயக்குனராக அறிமுகமான இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் வரும் ‘’செல்லமே செல்லம் என்றாயடி’’ என்ற பாடல் மூலம் ஸ்ரோயா கோஷல் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இந்த பாடல் வெளியான புதிதில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
உன்னவிட இந்த உலகத்தில் (விருமாண்டி)
கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விருமாண்டி. அபிராமி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார், 2004-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ‘’உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’’ என்ற பாடலை ஸ்ரோயா கோஷல் பாடியிருந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன் (தாஸ்)
இயக்குனர் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் தாஸ். ஜெயம்ரவி, ரேணுகா மேனன் இணைந்து நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘’ சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்’’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
முன்பே வா என் அன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் சில்லுனு ஒரு காதல். சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த இந்த படத்தில் சூர்யாவின் முன்னாள் காதலியாக பூமிகா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தில் ‘’முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் இன்றும் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உருகுதே மருகுதே (வெயில்)
வசந்தபாலன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் வெயில். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தில் பசுபதி, பரத் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ‘’உருகுதே மருகுதே’’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தார்.
மன்னிப்பாயா (விண்ணைத்தாண்டி வருவாயா)
கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா இணைந்து நடித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக காதலி காதலனிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் அமைந்த ‘’மன்னிப்பாயா’’ பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
உன் பேரை சொல்லும்போதே (அங்காடித்தெரு)
வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி மகேஷ் நடிப்பில் வெளியான படம் அங்காடித்தெரு. 2010-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘’உன் பேரை சொல்லும்போதே’’ என்ற பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
நன்றி: முகநூல் தோழி தமிழச்சி கயல்விழி