Breaking News :

Thursday, November 21
.

விஜய் டேவரகொன்டா, ரஷ்மிகா நடித்த ’டியர் காம்ரேட்’ படம் எப்படி?


டியர் காம்ரேட் படம் பார்த்தேன். விஜய் டேவரகொன்டா, ரஷ்மிகா மந்த்னா மற்றும் பலர் நடித்தது.

டியர் காம்ரேட் என்றவுடன் இடது அரசியல் பேசும் முழு நீளப் படம் என நினைத்தேன். அப்படியில்லை.. ஆரம்பத்தில் சிவப்புக் கொடியைத் தூக்கிக் கொண்டு மாணவ்ர் சங்கப் போராட்டம் நடத்தும் கதாநாயகன் மாணவ்ர்களின் உரிமைக்காகப் போராடுகிறான்.

அவனுடைய தாத்தா சாருகாசன் (நடிகர்) பிறருடைய பிரச்சினைகளுக்காக போராடுபவனும் அநீதிக்கு எதிராகப்  போராடுபனும் காம்ரேட்  என விளக்கம் தந்து ஆரம்பிக்கிறது படம்.

இறுதியில் கதாநாயகி காம்ரேட் என்பவன் பயமற்றவன், எனது பயத்தைப் போக்கி போராட வைத்தவன்..அவன் சகோதரன் போல, நண்பன் போல, பெற்றோர் போல..ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காம்ரெட் வேண்டும்...எனது வெற்றிக்கு அவன் தான் காரணம்.. என காம்ரேட்டுக்கு விளக்கம் கொடுத்து முடிக்கிறார்.

இடையில் நடப்பது லில்லியின் மீது காதல் கொள்வது, அவனது முரட்ட்டுத்தனத்தை வெறுத்து ஒதுங்குவது.. அவனும் பல ரவுடிகளால் அடிக்கபப்டுவது, உலகைச் சுற்றிவா, ஒவ்வொன்றையும் பார்,ரசி, படி என தாத்தாவின் குரலால் ஊரை விட்டே ஓடி மூன்று வருடகாலம் சுற்றித் திரிந்து இயற்கை மீதான காதலில் திரிய..

ஒருநாள் காதலியை மருத்துவ மனையில் பார்த்து கண் கலங்கி அவளையும் வெளி உலகினுள் அழைத்துச் சென்று  மீண்டும் பழைய நிலைக்குத் திருப்புகிறான். ஆனால் அவள் தேசிய கிரிக்கெட் வீரராக வர வேண்டியவள் ஏன் இப்படி முடங்கிப்போய்விட்டாள் எனத் தெரியாமல் முழுக்க  இறுதியில் தெரிந்து கொள்கிறான்.

கிரிக்கெட் செலக்சன் குழுத் த்லைவர் அவளை பாலியல் சீண்டல் செய்ய அதைப் பயந்து வெளியே சொல்லாமல் இருக்க அவள் அப்பாவுக்காக, சமூகத்தின் தரும் அவமானத்திற்காகப் பயந்து ஒருங்கி வாழ்கிறாள் என்று..

அப்புறம் என்ன காம்ரெட் செலக்சன் குழுத் தலைவரை அடித்து நொறுக்கி அதன் பின் காவல்துறை வழக்காகி கிரிக்கெட் குழு கமிட்டி விசாரணை வரை போயும் அவள் சொல்லாததால் காம்ரேட் ஜெயிலுக்குப் போகும் நிலையில்..
செலெக்சன் குழுத்தலைவர் அவளை அவமானமாகப் பேச வெகுண்டு எழுகிறாள் அவள்... உண்மையைக் கூறுகிறாள்..தான் தேர்வுக் குழுத் தலைவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான கதையைச் சொல்ல அவனுக்கு தண்டனை விதிக்க இவளுக்கு இந்திய கிரிகெட் குழுவில் இடம் கொடுக்க விசாரனைக் குழு பரிந்துரைக்கிறது.

இப்படியான இறுதித் திருப்பத்திற்கு காம்ரேட் தான் காரணம் எனக் கூற..ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காம்ரெட் தேவை என படம் முடிகிறது...
கார்த்திக் நடித்த தோழா போன்ற படம் தான் இது..சற்று ஒருபடி மேல.. அதில் அன்பு, நேசம், நேயம், வெகுளித்தன்மை உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பணக்காரக் கதாநாயகனின் உள்ளம் கவர் காம்ரேட்...

இதில் கதாநாயகிக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடுவதும் அவளை போராட வைப்பதுமான பெண்ணின் மனம் கவர் காம்ரேட்..

இந்த மாதிரியாகவாவது இருங்களேன்.. நீங்களும் காம்ரேட் தான்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.