Breaking News :

Thursday, November 21
.

நடிகர் டெல்லி கணேஷ்


திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் டெல்லியில் இராணுவத்தில் விமானப்படையில் எழுத்தராகப் பணியாற்றியவர். பணி நேரம் போக ஏனைய நேரங்களில் டெல்லியில் தக்க்ஷண பாரத நாடக சபா என்ற நாடகக் குழுவில் இவர் பல நாடகங்களில் நடித்தார். பிற நாடகக்குழுக்களில் அரங்கேற்றும் நாடகங்களையும்  இந்நாடகக்குழு வாங்கி அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ‘சோ’ வின் நாடகமான ‘மனம் ஒரு குரங்கு’, ‘கோவா டிஷ்’, மேஜர் சுந்தர்ராஜனின் ‘ஒரு பொய்’, ‘தீர்ப்பு’ போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது சகோதரர் சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் இவர் சென்னைக்கு வந்தார். இவரது சொந்தவூர வல்லநாடு அருகில் உள்ள முறப்பநாடு, டெல்லியிலிருந்து வந்தவுடன் விசு இயக்கிய ‘டௌரி கல்யாண வைபோகமே’ நாடகத்தில் தான் முதன் முதலாக நடித்தார். காத்தாடி ராமமூர்த்தியின் ‘பட்டினப்பிரவேசம்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அந்நாடகத்தை இயக்குநர் கே.பாலசந்தர் பார்த்தார். உடனேயே திரைப்படத்தில் நடிக்க அழைத்தார். 1976-இல் வெளிவந்த ’பட்டினப்பிரவேசம்’ படம்தான் இவரது முதல் படம். எங்கம்மா மகாராணி என்ற படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தில் கதாநாயகி சுமித்ரா. ஆனால் டெல்லி கணேஷுடன் இணைந்து நடித்தவர்.

 இவர் கதாநாயகனாக நடித்த எந்தப் படமும் சரியாகப் போகவில்லை. அதற்காக இவர் வருத்தப்பட்டதில்லை. அதற்குப் பிறகு குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பை வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தவர் அந்தக்கால நடிகர் எஸ்.வி.சுப்பையா. அவருக்கு அடுத்து இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் டெல்லி கணேஷ். கே.பாலசந்தர் சின்னத்திரையில் இயக்கிய ‘சஹானா’ நெடுந்தொடரில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் சின்னத்திரை சிவாஜி. அதிலிருந்து இவர் ‘சின்னத்திரை சிவாஜி’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

கமலஹாசனுடன் ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘ராஜபார்வை’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நாயகன்’, ‘புன்னகை மன்னன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் எங்கேயோ கேட்ட குரல் படத்தில் இவருடன் நாடகங்களிலும் இணையாக நடித்த கமலா காமேஷ் தான் இணையாக நடித்தார். அத்துடன் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படத்திலும் நடித்தார்.

இவரது மனைவி இவரது அத்தை மகள். அவருக்குச் சொந்த ஊர் திருவனந்தபுரம். இவருக்கு இரண்டு பெண்களும் ஒரே மகனும் உள்ளனர். அவர்கள் மூலமாக பேரன்  பேத்திகளும் உள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.