Breaking News :

Saturday, December 21
.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா இணையும் புதிய படம்


தமிழ்சினிமா வரலாற்றில்  முதன் முறையாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டில் கொண்ட 'ஜாலியோ ஜிம்கானா' படத்தினை டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில்  எம். ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- நடிகர் பிரபுதேவா காம்போ இந்தப் படத்தில் மீண்டும்  இணைந்துள்ளது!

டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள  படங்களைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்பு 'நாகேஷ் திரையரங்கம்' என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க  ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தை சிறப்பாக தயாரித்து   தமிழ்  சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம்- பிரபுதேவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.  தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது. இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை இந்தப் படம் கொண்டுள்ளது. 

படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது, "மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏன் என்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது. பட்ஜெட் ஆகவும் இது பெரியபடம்.  தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை    குறை வைக்காமல் செய்து தந்தார். படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. பிரபுதேவா, மடோனா, யோகிபாபு,  அபிராமி,  யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன்  உள்ளிட்ட  படத்தில் நடித்துள்ள மற்ற  எல்லா நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். மக்களை கொண்டாட வைக்கும் அளவில் உருவாகியுள்ள இப்படத்தின்  வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.

நடிகர்கள்: பிரபுதேவா, மடோனா செபாஸ்டின்,யோகிபாபு, அபிராமி,  யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா,  ரெடின் கிங்ஸ்ட்லி, ஒய்.ஜி. மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி,  சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா கதிர்’, ஆதவன், ‘தெலுங்கு’ ரகுபாபு,  மரியா, அபி பார்கவன் உள்பட  பலரும் நடித்துள்ளனர். 

தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: ஷக்தி சிதம்பரம்,
தயாரிப்பாளர்: எம். ராஜேந்திர ராஜன்,
தயாரிப்பு நிறுவனம்: டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட்.
கலை இயக்கம்: ஜனார்த்தனன், 
படத்தொகுப்பு: 'அசுரன்’, ’விடுதலை’ புகழ் ராமர், 
ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா,
நடனம்: பூபதி ராஜா,
ஸ்டண்ட் மாஸ்டர்கள்: மகேஷ் மாத்திவ் மற்றும் பிரதீப்,
பாடல் வரிகள்: மு. ஜெகன் கவிராஜ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.