Breaking News :

Thursday, November 21
.

GLOOMY SUNDAY: காதல் காவியம்


GLOOMY SUNDAY காலத்தால் அழிக்கமுடியாத ஒரு ஒப்பற்ற காதல் காவியம் தான் இந்தத் திரைப்படம்.

 

எனக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஒரு ஹங்கேரிய திரைப்படம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தாக்கத்தில் இன்னும் ஏராளமான படங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு படம் தான் இதுவும்.

 

இந்தப் படத்தின் நாயகி ஒரு பேரழகி. அவளை மூன்று பேர் காதலிக்கின்றனர். ஆனால் அவளோ அதில் இரண்டு பேரை காதலிக்கிறாள். என்னடா ஒரு கதை ஒரு மாதிரியாகப் போகிறதே என்று நினைக்கிறீர்களா? குழப்பமே வேண்டாம். படத்தைப் பார்த்தால் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 

 

ஒரு உணவு விடுதி முதலாளி, விடுதியில் பியானோ வாசிப்பவன், ஒரு ஜெர்மன் வியாபாரி இவர்கள் தான் அந்த மூன்று பேரும். அவள் வியாபாரியைத் தவிர்க்கிறாள். நாயகியோ அந்த விடுதியில் ஒரு பணிப்பெண்.

பியானோ வாசிப்பவன் ஒரு ட்யூன் போடுகிறான். அதுதான் gloomy sunday. அந்த ட்யூன் உலகம் முழுக்க பிரபலம் ஆகிறது. அது மிகவும் சோகமான ட்யூன். ஆனால் அதைக் கேட்பவர்கள் நிறையப் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

 

உண்மையில் சிலர் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும்போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றுகிறது என்பார்கள். அது இந்தப் படத்தில் உறுதியாகிறது.

 

இடையில் இரண்டாம் உலகப்போர் நடக்கிறது. வியாபாரி ஜெர்மன் படைத்தளபதியாக அந்த உணவு விடுதிக்கு வருகிறான். அவளை அடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறான். (அதிகாரத்தின் இயல்பே துஷ்பிரயோகம் செய்யப்படுவதுதான் என்பது என் கருத்து) இறுதியில் அவள் மட்டுமே மிஞ்சுகிறாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.