Breaking News :

Sunday, February 23
.

இசைஞானி இசையில் திரைப்படம் "ஸ்கூல்"!


Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்க,  யோகிபாபு நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில், உருவாகியுள்ள திரைப்படம் "ஸ்கூல்".

இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா  கோலாகலமாக நடைபெற்றது.

தயாரிப்பாளர்,  இயக்குநர் R K வித்யாதரன் பேசியதாவது…

இந்த ஸ்கூல் திரைப்படம்,  ஒரு அழகான கதை. ஒரு படைப்பாளிக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் போது, புதுப்புது ஐடியாக்கள் கிடைக்கும். அந்த எண்ணத்தில் தான் இந்த குவாண்டம் புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்தோம். இந்த வித்தியாசமான  கதையில்  யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, அனைவரது சாய்ஸாகவும் யோகிபாபு தான் இருந்தார். ரொம்ப சிம்பிளாக சின்ன சின்ன விசயங்களைக் கடத்துபவர்கள், பெரிய விசயங்களைச் சொல்லும்போது பெரிய அளவில் சென்றடையும். இப்படத்தில் அவர் டீச்சராக நடித்துள்ளார்.

பூமிகா மேடம் கண்டிப்பான டீச்சராக நடித்துள்ளார். என் குரு கே.எஸ் ரவிக்குமார் சார் நடித்துள்ளார். நிழல்கள் ரவி, சாம்ஸ், பிரியங்கா என பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ளனர். உண்மையான ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ஸ்டூடண்ட்ஸாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை, ஒரே ஒரு தடவை தான் இசைஞானி பார்த்தார் ஆனால் சின்ன சின்ன டயலாக்குகளை கூட உன்னிப்பாக கவனித்து மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் இசை இப்படத்திற்கு புதிய வடிவம் தந்துள்ளது. தாமு என் நீண்ட நாள் நண்பர். மாணவர்களுக்காகப் பல நல்ல விசயங்கள் செய்து வருகிறார், அவர் இவ்விழாவிற்கு வந்ததற்கு நன்றி.  ஒரு சின்ன எண்ணம் தான் எல்லாவற்றிக்கும் காரணம் அந்த மூலகாரணம் எனும் ஐடியாவை வைத்துத் தான் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். கண்டிப்பாக இப்படம் ஒரு டிரெண்ட்செட்டராக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

நடிகர் யோகிபாபு  பேசியதாவது…

மிகவும் சந்தோசமாக இருக்கிறது. “ஸ்கூல்” இந்தப்படத்திற்கு முதலில் வித்யாதரன் சார் என்னைக் கூப்பிடும்போது, பியூன் கேரக்டருக்குத்தான் கூப்பிட்டார். வாத்தியார் கேரக்டருக்கு ஆள் வரவில்லை என்று நினைக்கிறேன், என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். நான் படித்ததெல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் தான். நான் படிச்ச ஸ்கூல் கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து  வருகிறேன். வித்யாதரன் சார் மனது வைத்தால், கண்டிப்பாக அதைப் படம் செய்துவிடலாம். தாமு அண்ணன் வந்துள்ளார். அவரைப் பார்த்துத் தான் நானெல்லாம் நடிக்க வந்தேன், அவரோடு நடிக்க ஆசை, அண்ணா மீண்டும் நடிக்கலாம். இளையராஜா சார் என்றுமே அவர் தான் ராஜா. மிக அருமையான இசையைத் தந்துள்ளார்.  அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

பக்ஸ் எனும் பகவதி பெருமாள் பேசியதாவது…

ஸ்கூல் படத்தில் நிறையப்பேரோட ஹார்ட் ஒர்க் இருக்கிறது. ரொம்ப ஷார்ட் டைம்ல, மிகப்பெரிய உழைப்பைப் போட்டு, இப்படத்தை எடுத்துள்ளோம். அனைவரது, உழைப்புக்கும் பலன் கிடைக்க வேண்டும். இசைஞானி சார் மியூசிக்கில் நான் நடித்துள்ளேன் என்பது பிரமிப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.


சிறு முதலீட்டு தயாரிப்பு சங்கம் சார்பில் அன்புச்செழியன் பேசியதாவது…

தயாரிப்பாளர் வித்யாதரன் இப்போதே படத்தை விற்று ஜெயித்து விட்டார். அவரே இயக்குநர், அவரே தயாரிப்பாளர் என்பதால் படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இளையராஜா சார் மியூசிக். அன்று போலவே இன்றும் அற்புதமாக இசையமைத்துள்ளார். ஒரே ஆளாகப் படத்தை உருவாக்கியுள்ள வித்யாதரனுக்கு இப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் சாம்ஸ் பேசியதாவது…

ஸ்கூல் பட விழாவிற்கு வந்து, வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. இந்த இசை நிகழ்ச்சியின் தலைவர் இளையராஜா சார் தான். சோகம், இன்பம் என எதுவானாலும் அவர் தான். அவர் இசை தான். திரைத்துறைக்கு வரும் போது, கமல் சாரோடு நடிக்க வேண்டும், ரஜினி சாரோடு நடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம், அது போல் இளையராஜா சார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், அதை நிறைவேற்றித் தந்த, வித்யாதரன் சாருக்கு நன்றி. இப்படத்தில் பக்ஸ் சாருடன் இணைந்து வாத்தியாராக நடித்துள்ளேன். நல்ல அனுபவம். இந்த தலைமுறை பள்ளி குழந்தைகளுக்கு மிக முக்கியமான விசயத்தை இப்படம் சொல்லும். யோகிபாபு, பூமிகா மேடம் என எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி.

கேபிள் சங்கர் பேசியதாவது..,

வித்யாதரன் என் நீண்ட கால நண்பர், போன படத்தில் என்னை  நடிக்க வைத்தார், இரண்டு நாள் எடுத்து, படம் முழுதும் வரவைத்தார். இப்படத்தில் நான்கு நாட்கள் நடிக்க வைத்தார், மிகப்பெரிய கேரக்டர். இவரிடம் ஆச்சரியப்படும் திறமை, எல்லா நடிகர்களையும் வைத்துக் குறைந்த காலத்தில் மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்து விடுவார். இளையராஜாவே வியந்து கேட்டுள்ளார். புதிதாகப் படமெடுப்பவர்கள் இவரைப்பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். படம் பார்த்து விட்டேன் மிக நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் தாமு பேசியதாவது…

வித்யாதரன் என் நீண்ட கால நண்பர். 1992ல்  என் ரூம்மேட்.  மிகச்சிறந்த வெட்னரி டாக்டர், ஆனால் எப்போதும் கதைகள் எழுதிக்கொண்டே இருப்பார். அவருக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம். ஒரு முறை இளையராஜா சார் பங்சனுக்கு வருகிறார், நீ வருகிறாயா எனக்கேட்டேன் ? இல்லை அவரை வைத்துப் படமெடுக்கும் விழாவிற்குத் தான் வருவேன் என்றார். இன்று அது நடந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அவர் குடும்பம் அவருக்குப் பெரிய உறுதுணையாக இருந்துள்ளார்கள். யோகிபாபு இந்தபடத்திற்கு மிகப்பெரிய பிளஸ். இளையராஜா அதைவிட மிகப்பெரிய பிளஸ். இயக்குநராக யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சாதித்துள்ளார் வித்யாதரன். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.