தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் ஸ்டன்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம் இன்று சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளிச்சிருக்கார்.
அதில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் சிலர் போலியான லெட்டர் பேட், சீல் ஆகியவற்றை பயன்படுத்தி 22 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாகுவார் தங்கம், "கடந்த 2018ம் ஆண்டு முதல் சங்கத் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.
பதவி ஏற்ற பின்பு ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படாய்ங்க அன்று முதல் தொடர்ந்து பல்வேறு வழியில் அவர்கள் சங்கத்திற்கு மிரட்டல் விடுத்து வாராய்ங்க. போலியான லெட்டர் பேட், பில்புக், சீல், ரசீதுகளை தயாரித்து உறுப்பினர்களுக்கு போலியான சான்றிதழ் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வாராய்ங்க.
மேலும் யூனியன் வங்கி சீலை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டிருக்காய்ங்க. போலி லட்டர் பேடில் எனது பெயர் இருப்பதால் பணத்தை கொடுத்து ஏமாந்த உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். குறிப்பாக மோசடி நபர்களிடம் இது குறித்து கேட்ட போது என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுறாய்ங்க. எனவே சங்கத்தின் பெயரில் பணமோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சங்கத்திற்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு தரவேண்டும்.
அது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி 25 முதல் 50 ஆயிரம் வரை பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் அந்த கும்பல் சங்கத்தில் வேலை செய்யும் நபர்களை உள்ளே வரவிடாமல் தடுத்து தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபடறாய்ங்க " அப்படீன்னார்.