சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்ட மளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை நடந்தது. விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி; தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியமிக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்.
தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.