Breaking News :

Saturday, December 21
.

'களவாணி பசங்க' படத்தின் நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ ஹிட்


ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள 'கள்வன்' படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. ரேவா இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து களவாணி பசங்க என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

 

இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார்.

 

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.

 

*தொழில்நுட்ப குழு*:

 

தயாரிப்பாளர் - ஜி.டில்லி பாபு

 

தயாரிப்பு இல்லம் - ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி

 

ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் - பிவி ஷங்கர்

 

இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்

 

எடிட்டிங் - சான் லோகேஷ்

 

கலை - என்.கே. ராகுல்

 

ஸ்டண்ட் - திலிப் சுப்பராயன்

 

கதை - ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்

 

திரைக்கதை - பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்

 

வசனங்கள் - ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்

 

கூடுதல் திரைக்கதை - SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்

 

நிர்வாக தயாரிப்பாளர் - பூரணேஷ்

 

தயாரிப்பு நிர்வாகி - எஸ்.எஸ்.ஸ்ரீதர்

 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - கே.வி. துரை

 

பாடல் வரிகள் - சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்

 

ஆடை வடிவமைப்பாளர் - கிருஷ்ண பிரபு

 

ஸ்டில்ஸ் - இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் - சுபியர்

 

ஒப்பனை - வினோத் சுகுமாரன்

 

PRO - சுரேஷ் சந்திரா

 

விளம்பர வடிவமைப்பாளர் - வின்சி ராஜ்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.