Breaking News :

Saturday, December 21
.

காமசூத்ராவில் வாத்ஸயானார் கூறுவது?


மனிதனை தவிர மற்ற விலங்குகள், பறவைகள் மற்ற உயிரினங்கள் இன்விருத்திக்காக மட்டுமே ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அல்லது காலங்களில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
 
ஆனால் மனிதன் மட்டும் தன் காம வேட்கையை எப்போது எந்த பருவத்திலும் ஆணும் பெண்ணும் அனுபவிக்க விரும்புகின்றனர்.
 
மனிதனின் கலவி வெறும் இனப்பெருக்கத்துக்கு மட்டும் இல்லாமல் அதில் இன்பத்திற்காகவும் நடைபெறுகிறது.
 
ஒரு யானையை எடுத்து கொண்டால் அது இனப்பெருக்க உறுப்புகளை மட்டும் இணைத்துக்கொண்டு இனப்பெருக்கம் நடைபெறும்.
 
மனிதர்கள் மட்டுமே தன் உடல் முழுவதையும் தன் இணை மூலம் முழுவதுமாக தீண்டி இன்பத்தை பெற்று கொள்ள இயலும்.
 
அதனால் கலவியில் பல வழிமுறைகளை இன்பத்தை துய்க்க நம் முன்னோர்கள் வழிவகுத்து வைத்தனர்.
 
எவ்வாறு கணிதம், இயற்பியல் equvation சமன்பாடுகள், வேதியியலில் எந்த பொருளை எதனுடன் சேர்த்தால் புதிய ஒரு பொருள் கிடைக்கும் அது போல் ஆணும் பெண்ணும் சரியான வழிமுறைகளில் உடலுறவு துய்க்கும் போது பல இன்பங்களை பெறமுடியும் என்று பல்லாயிரம் வருடங்கள் முன்பே அறிந்திருந்தார்கள்.
 
கலவி இன்பத்தை பெறுவதற்கு ஆண் பெண்ணிற்கு பலவழிகள் இருந்தாலும் திருமண வழியாக பாலுறவு கொள்வதே சிறப்பான பாலுறவில் ஈடுபட முடியும் என்பது பாலியல் மருத்துவர்களின் கருத்து.
 
திருமண ஒப்பந்தத்தில் இணை தேர்வு எவ்வாறு இருக்கவேண்டும்
பொருளாதாரத்தில் சம அந்தஸ்த்தில் உள்ள நபர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஏனென்றால் பொருளாதாரத்தில் அதிக செல்வாக்காக இருக்கிறார்களோ அவர்களுக்கு பணிந்து போக வேண்டிய சூழ்நிலையை உருவாகும் அது குடும்ப அமைதியே சீர்குலைக்கும்
ஆணை விட பெண் வயது குறைவாக இருக்க வேண்டும் என்று காமசூத்ராவில் வாத்ஸயானார் கூறுகிறார்.
 
தன் தலை முடி, நகம், பாதங்கள், காதுகள், தன் உடல்களை ஆரோக்கியமாக, சுத்தமாக பராமரிப்பவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்.
 
முதல் பார்வையிலேயே பிடிக்காத ஆண் பெண் நபர்களை குடும்பத்தார்கள் அவர்களை இணைத்து வைக்க கட்டாய படுத்த கூடாது என்று காமசூத்திரம் கூறுகிறது.
 
ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்த உடனே பிடிக்கும் நபர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்.

பணக்காரன் என்பதற்காக கண்மூடித்தனமாக பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தகூடாது.
   
அடிக்கடி வெளியூர் பயணம் செய்யும் நபர்களை தேர்வு செய்தால் திருமண வாழ்க்கையில் முழுமையான திருப்தி அடையமுடியாது என்பது பாலியல் மருத்துவர்களின் கருத்து

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.