1988 ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருதை பெற்றவர் பெற்றிருந்தார் அலி அக்பர். 58 வயதாகும் அலி அக்பர் தற்போதும் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இவர் பாஜகவின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம்தான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் பிபின் ராவத் இறப்பு சம்பவத்தை வைத்து கண்டிக்கத்தக்க வகைகளில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இறப்பை கொண்டாடும் விதமாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மலையாள இயக்குநர் அலி அக்பர் இதனை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், எந்த ஆடையுடன் நான் பிறந்தேனோ அதனை துறக்கிறேன் என்று இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். அவர் மேலும், பேசிய ஐந்து நிமிடங்களில் எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது . இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் என் மதத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று தெரிவித்து இருந்தபடி இன்று இந்து மதத்துக்கு மாறினார்அலி அக்பர். அவர் மட்டுமல்லாது அவரது மனைவி லூசியம்மாவும் தன்னுடன் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். “ இனி என் பெயரை ராமசிம்ஹன் என மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது மகள்களை எக்காரணம் கொண்டும் மதம் மாறும்படி நான் சொல்ல மாட்டேன். அது அவர்களது விருப்பம்” அப்படீன்னு தெரிவித்துள்ளார்