இந்திய சினிமாவின் இயக்குர் ஜாம்பவான மணிரத்னம் நேர்த்தியான கதை சொல்லும் திறனுக்கும், குறைந்த வசனத்தில் காட்சிகளைப் புரிய வைக்கும் கோணத்திலும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சினிமா எடுப்பதில் பெயர் பெற்றவர்.
எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் சினிமாவை பார்த்தே சினிமாவின் இலக்கணங்களைக் கற்றுக் கொண்டு தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்தினைக் கன்னடமொழியில் எடுத்தார். இந்தப் படத்தினையடுத்து மோகன் மற்றும் முரளி ஆகியோரை கதாநாயகனாகக் கொண்டு இதயக் கோவில், பகல் நிலவு ஆகிய படங்களை இயக்கினார். இதற்கிடையே மலையாளத்தில் உணரு என்ற படத்தினையும் இயக்கினார்.
மேற்கண்ட படங்கள் அனைத்துமே சுமாரான வெற்றியையே பெற்றது. 1986-ல் வெளியான மௌனராகம் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. மோகன், கார்த்திக், ரேவதி நடிப்பில் உருவான மௌனராகம் சூப்பர் ஹிட் வெற்றிப் படமாக அமைந்தது.
குறிப்பாக பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கின்றன. தனது முந்தையை படங்களைப் போல் அல்லாமல் மௌனராகம் படம் குறைவான வசனங்களைக் கொண்டு முகபாவனைகளிலேயே நடிகர்களை நடிக்க வைத்திருப்பார் மணிரத்னம்.
இந்தப் படம் வெளியான தருணத்தில் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றிற்குச் சென்றிருக்கிறார் மணிரத்னம். முதல் 10 சீட் வரிசைகள் காலியாக இருந்திருக்கிறது. மேலும் படத்தைப் பார்த்த ஒருவர் என்னா படம் எடுத்து வச்சுருக்காங்க.. அந்த ஹீரோயின ஒரு அடி போட்டா எல்லாமே சரியாய்ப் போயிருக்கும் என்று வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போதுதான் மணிரத்னத்துக்குப் புரிந்தது. ரசிகனின் பார்வையில் படங்களை எடுத்து திருப்திப்படுத்துவது கடினம். எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாவது என்ற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மௌனராகம் கதையின் கருவையே அவர் புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்.
ஆனால் இதில் மணிரத்னம் கற்றுக் கொண்டது. ரசிகனின் எதிர்பார்ப்பைத் தான். இந்தப் படத்தில் தான் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தான் அடுத்து இயக்கிய நாயகன் படத்தில் அனைத்தையும் சரியான கலவையில் கொடுக்க படம் இந்திய சினிமாவிலேயே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதனையடுத்து தொடங்கிய மணிரத்னத்தின் சினிமா பயணம் தளபதி, அஞ்சலி. அக்னிநட்சத்திரம் என நீண்டு இன்று தக் ஃலைப் படம் வரை தொடர்ந்து வருகிறது.