மாடர்ன் லவ் சீரிஸ்ல் இதுவரை நினைவோ ஒரு பறவை, மார்கழி, பறவை கூட்டில் வாழும் மான்கள் என மூன்று எபிசோட் பார்த்துள்ளேன்.
நினைவோ ஒரு பறவையில் வாமிகாவின் நடிப்பு நன்றாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அந்த கதையே எனக்கு பிடிக்கவில்லை.நிறைய படுக்கையறை காட்சிகள், அந்தரங்கமான முகபாவனைகளை காட்ட கூடிய க்ளோசப் காட்சிகள்,டபுள் மீனிங் வசனங்கள் (மைக்,வாத்தா,மயிரு, Fuck) என்று இன்றைய 2K கிட்ஸ்களுக்கு பிடிக்கும் வகையில் A Film By "K "என்னும் தி.குமாரராஜா அற்புதமான காவியத்தை படைத்துள்ளார்.
டீன் ஏஜ் பருவத்தில் வரும் பதின்ம காதலை எல்லை மீறாமல் கிறிஸ்த்துவ வாழ்வியலோடு ஜாஸ்மின் என்னும் ஒரு இளம் பெண்ணின் வழியாக சொன்னது சிறப்பு.
அழகான இதழ் தந்த முத்தத்தோடு மார்கழி கதையை ஹைக்கூ கவிதையாய் முடிவுக்கு கொண்டு வந்தது நன்றாக இருந்தது.
மார்கழி சீரிஸ்ஸில் இடையிடையே அந்த பாடலும் ரம்யமாய் இருந்தது.
நல்லா இருந்த குடும்பத்தை ஏன்மா ரோஹினி இப்படி நாசம் ஆக்கிட்ட என்று விஜிம்மாவை (விஜயலட்சுமியை) நேரில் பார்க்கும் போது கேட்கத் தோணுது.
ரம்யா நம்பிசனின் கதாபாத்திரத்தின் மீது எல்லையில்லா காதல் இந்த சீரிஸ்ஸை பார்க்கும் போது நிச்சயம் வரும்.இப்படி பட்ட பொண்டாட்டியெல்லாம் கிடைச்சா யாருக்காவது கை விட தோணுமா என்ன?
கணவன் துரோகம் செய்த போதும் அன்பு மாறாமல் தியாகத்தின் மறு உருவமாய் அந்த கதாபாத்திரம் திகழ்ந்தது.
ஒரு சரியில்லாத,முறையில்லாத ,தவறான கதையை நேராக,எல்லோரும் ஏற்று கொள்ளும் படி முறையாக,சரியாக ,சொல்லியிருந்தார் பாரதிராஜா.
End Card ல் பாலு மகேந்திராவுக்கு என்று டைட்டில் போட்டதில் ஏதாவது உள்குத்து இருக்குமா?
Any way I like Your Direction Mr.BharathiRaja And Love u too Also.
பறவை கூட்டில் வாழும் மான்கள் நிச்சயமாக பக்குவப்பட்ட மனைவிகளை பெற்ற கணவன் ஒருமுறை பார்க்கலாம்.
நன்றி: லி.நௌஷாத் கான்-