Breaking News :

Thursday, November 21
.

Old always Golden Movie: இன்று பிச்சைக்காரன் .. அன்று திருடன்


கால கட்டத்தில்  புதுமை தலைப்பில் படம்  எடுக்கிறோம் என்பவர்களுக்கு... நடிகர்திலகம் அன்றே இதிலும் புதுமை முன்னோடியாக இருந்தார். கள்வன் முரடன்  என்ற பாணியில் மீண்டும் நடிகர்திலகம் புதுமையாக செய்த படம் தான் திருடன்..

 

அன்றைய காலகட்டத்தில் தங்களை மேதாவிகளாக டைட்டிலில் பிரபலப்படுத்தி கொண்டவர்களுக்கு மத்தியில் கதைக்கேற்ற தலைப்பில் நடித்த நடிகன் நடிகர்திலகம்..

திருடனை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசிக்க வைத்து இருப்பார்.

அறிமுகமாகும் அந்த முதல் காட்சியே அதைத்தான் சொல்கிறது.வலது காலை தூக்கி இடது காலை தேய்த்து நிற்கும் அந்த போஸில் தன் ஆரம்ப வருகையை 

அறிவிப்பார்.அதிலேயும் ஒரு  ஸ்டைல் காண்பிக்க முடியும் என்னால் என்பது போல் அக்காட்சி அமைந்திருக்கும்.

கதாநாயகனின் கால்களை காண்பித்து உருவத்தை காண்பிக்கும் என்ட்ரி காட்சிகளிலும்  அவரே முன்னோடி.நடிகர்திலகத்துக்காக எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள்.

 

80 களில் வந்த DFT மாணவர்களின் படங்களில் ,நாயகர்களின்  சிறைச்சாலை காட்சிகளை காண்பிக்கும் போது மேற்கூரை கம்பிகளில் நாயகர்கள் நடந்து வருவதை கீழிலிருந்து படமாக்கி இருப்பார்கள் .பல படங்களில் இந்த காட்சியை பார்த்திருக்கலாம்.இதுதான் அப்போது  டெக்னிகல் ஷாட்டாம்..கறுப்பு வெள்ளையில் செய்த திருடனெல்லாம் அப்போதே வேற லெவல்...

இந்த உத்தி அப்போதே  திருடனில் காண்பிக்கப்பட்டதுதான்.நடந்து வரும் 

நடிகர்திலகத்தின் பூட்ஸ் கால்களை காண்பித்து, பின் ஜெர்க் ஆகி நிற்கும் நடிகர்திலகத்தின் உருவத்தை காண்பிக்கும் திரை.அது  ஆயிரம் கோடி நமஸ்காரங்களை கண்டிருக்கும்...

அடுத்தது..

 

நடிகர்திலகம்  சிறையை விட்டு வெளியே வரும் காட்சி .கையை உயர்த்தி சோம்பல் முறிப்பது போல் காட்சி அது.அதை எவ்வளவு ஸ்டைலாக செய்திருப்பார்.சோம்பல் முறிப்பதை கூடவா? என்றால், ஆமாம்! அதை கூடத்தான்.

பின் சில கதை நகர்வுகள் தாண்டி  விஜயாவிடம் தன் ப்ளாஷ்பேக்கை சொல்வார்.அதிலும் சில காட்சிகள் தாண்டிய பின், நடிகர்திலகத்தின் அதிரடி ஒவ்வொரு பிரேமிலும் கலக்கும்.பாலாஜியின் குரூப்பில் இருப்பார்.துப்பாக்கியை கையாளும் லாகவம், தொப்பிகளை சுட்டு வீழ்த்துவது என்று கௌபாய் கலக்கலாக இருக்கும். சிகரெட்டை வாயில் வைத்த படியே, பாலாஜியையும் விஜயலலிதாவையும் பக்கத்தில் சேர்த்து  இடையில் கை வைத்தபடியே நடப்பார்.சிகரெட்டை உதட்டில் வைத்தபடியே புகையை விட்டு  கொண்டே பேசி நடப்பதும் ,அந்த நடையையே ஒரு ஸ்டைலாகவும் செய்தபடியே நடிக்கும் நடிகர்திலகத்தின் அசைவுகள் ஜேம்ஸ்பாண்ட் பட காட்சிகளை  நினைவுபடுத்தும். 

அந்த ஸ்டைலான வாக்கிங் சீன் செம கெத்து.இனி பாருங்கப்பா! ராஜுவோட தர்பாரை! என்பதுக்கு முன்னோடியாக அமைந்திருக்கும்.

 

மரண மாஸ்! வேற லெவல்! செம!

இப்போது வரும் அரை வேக்காட்டு படங்களுக்கு ரசிகர்களின் பஞ்ச் தான் இது போன்ற வார்த்தைகள்.அவரெல்லாம் அப்பவே எப்படி கம்பீரமாக பிரசன்ட் செய்திருக்கிறார்.நாமெல்லாம் அதை என்னவென்று சொல்ல! 

அதை தொடர்ந்து, சுவையான காட்சி அமைப்பு ,அந்த ஷுட்டிங் ஸ்பாட் கொள்ளை நாடகம்.அந்த டைரக்டர் பார்ட் 

நடிப்பில் நம் மனதை கொள்ளையடித்து விடுவார்.

 

ஒரு புது வித  கொள்ளை  டிராமா காட்சி அமைப்பு தமிழ் சினிமாவில் இது.

அது ,அடுத்த காட்சியை ஆவலுடன் எதிர்நோக்க வைத்தது.

அந்த திருட்டு காட்சியை அவர் விவரிக்கும் அழகு வெகு சுவாராஸ்யம்.இடையில் ஒருவர் 'என்ன டைட்டில் 'என்பார்? திருடன் என்பார்.

அப்போதெல்லாம் அடிக்கடி கேட்ட 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை 'பாடலை இப்போது மீடியாக்களில் அதிகம் பார்க்க முடியவில்லை.ஒரு தரம் மீண்டும் ஒளிபரப்பபட்டால் இது அடிக்கடி ரிபீட் ஆகும்.இப்பாடலில் வரும் 'சின்ன ராணி வண்ண மேனி 'வரிகளுக்கு நடிகர்திலகம் நடக்கும் ஸ்பெசல் நடை 

அசத்தல்.இப்பாடல் டூரிங் தியேட்டர்களில் அதிக அலப்பரைகளுடன் பார்க்கப்பட்டது.

 

" நான் பணத்தைக் கடத்துவேன் குழந்தையை கடத்த மாட்டேன் 

பணத்துக்கு உயிரில்லே

குழந்தைக்கு உயிரிருக்கு ..

ஆபத்தான இடத்துக்கு ஆபத்தான ஆயுதம்  

தேவையில்லே!"

குழந்தையை கடத்தும் காட்சிக்கான வசனங்கள் இவை. இதை தொடர்ந்து அந்த துப்பாக்கியில் இருக்கும் தோட்டாக்களை பாலாஜியிடம் கொடுப்பார்.குண்டில்லாத துப்பாக்கியா? என்பார் பாலாஜி. 

இருதயம் இல்லாத திருடனா நான் இருக்க விரும்பவில்லை என்பார் நடிகர்திலகம்.ரசிக்க வைக்கும் வசனங்கள்! 

 

எப்படிப்பட்ட பிண்ணனி கொண்ட கதையாக இருந்தாலும் நடிகர்திலகத்துக்கு 

எழுதாமல் எந்த பேனாவும் திருப்தி அடையாது. 

திருடன் என்ற டைட்டிலிலும் நடிப்பார்.அவர் நடிப்பு ,காரெக்டர் ஜெம்மாகத்தான் இருக்கும்.

 

குழந்தை கடத்தும் போது குழந்தையின் தாய் இறக்கும் சூழ்நிலையில், அது ராஜுவின் (நடிகர்திலகம் )மனத்தை மாற்றுகிறது.தவறுக்கு வருந்தி சிறைக்கு செல்கிறார்.ஐந்து வருட சிறைவாசத்திற்கு பிறகு வெளியில் வரும் ராஜு நேர்மை  வழியில் வாழ்வது போல் திரைக்கதை காட்சிகள் .

பின் விஜயாவை திருமணம் செய்து குடித்தனம்.

 

முதலிரவு காட்சியில், நாகேஷின் தில்லானா மோகனாம்பாள் பட விமர்சனங்கள் ஒரு சுவை.நடிகர்திலகத்தின் படத்தை பற்றி அவர் படத்திலேயே விமர்சனம் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றது இப்படத்தில் தான்.

 

ஹோட்டல் திறப்பு விழாவில் கைப்பை காணாமல்  போக, அது பற்றி தெரிந்து கொள்ள  நடிகர்திலகத்தின் வீட்டிற்கு வருவார் மேஜர்.ஜாடை மாடையாக திருட்டு பற்றி மேஜர் பேச நடிகர்திலகம் கேட்பார்:சிரிச்சுகிட்டே கழுத்தறுக்கிறீங்களே!

அதை எவ்வளவு அழகாக சொல்வார்.நக்கல் அதில் இருக்கும்.சின்ன வசனமாக இருந்தாலும் அதை சொல்லும் அழகில் அந்த காட்சிக்கு பலம் சேர்ப்பார் நடிகர்திலகம்.அந்த பாவனைகளிலேயே மேஜரின் இன்சல்டுக்கு பதிலடி கொடுப்பார்.

 

திருந்தி வாழும் ராஜுவை (நதி )மீண்டும் தன் கூட்டத்திற்கு கொண்டுவர ஜெகன்நாத் (பாலாஜி) முயல்வார்.முதற் கட்டமாக ராஜுவின் வீட்டிற்கு வந்து லாரிக்கு வாங்கிய கடனை அடைக்க பணம் தருவார்.

இது திரைக்கதையின் அடுத்த முக்கிய காட்சி.

 

இந்த காட்சியில் திருந்தி வாழும் ஒரு நேர்மையான மனிதனின் நடிப்பை  நடிகர்திலகம் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

அதிலும் சுய கௌரவத்தை காட்டும் வசனங்கள் பளிச்.

'செட்டியார் பணத்திற்கு வட்டிமட்டும் தான்கேட்பார்.நீயோ என் வாழ்க்கையையே அல்ல கேட்பே '

கடைசியில் 'கெட் அவுட் 'என்பதை உரக்கச் சொல்வார்.இந்த வார்த்தையை பல படங்களில் சொல்லியிருப்பார்.ஆனாலும் எதிலும் ஒரே மாதிரி உச்சரித்திருக்க மாட்டார்.ஒவ்வொரு கெட் அவுட்டிலும் அந்த காரெக்டரின் குணம் இருக்கும்.

 

திருடனில் காட்சிகள் சுவாராஸ்யமாக இருக்கும்.அலுப்பே 

இல்லாமல் பார்க்கும் படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

 

செட்டியாரை கொலை செய்து ராஜுவின் மேல் பழி விழச் செய்வார் ஜெகன்நாத்..

இது ராஜு தன் வழிக்கு வர..

 இது அடுத்த காட்சி.

இக் காட்சி நல்ல விறுவிறுப்பு கூட..

அந்த விசாரணைக் காட்சிகள் வெரி இன்ட்ரஸ்டிங். 

 

அடுத்து ,கார் டிரைவராக வேலை செய்யும் காட்சி அன்னை இலத்தில் படமாக்கப்பட்டிருக்கும்.

தன் வீட்டு வாசலிலேயே நடிகர்திலகத்தை திருடன் என்று சொல்லும்படி காட்சி இருக்கும். முற்போக்கான கதாநாயகன் யாராக இருந்தாலும் இது போன்ற காட்சியை படம் பிடிக்க அனுமதிப்பார்களா? 

என்னதான் சினிமாவாக இருந்தாலும் இது போன்ற காட்சிகளை படம் பிடிப்பதை குடும்பத்தார்தான் விரும்புவார்களா?

 

மேலும் வீட்டை கோவிலாக நேசித்த மனிதர் அவர்.நடிப்பென்று வரும்போது எத்தனை தூரம் இறங்கி வந்து இப்படியெல்லாம்  நடித்திருக்கிறார் என்றால் ,அவரின் தொழில் பக்தியை என்னவென்று சொல்வது? 

 

சுயதிருட்டு தன்னை சார்ந்தது.

கூட்டுத் திருட்டு பலரை சார்ந்தது.

சுய திருட்டில் தனி ராஜாவாக இருக்கலாம்.

திறமை இருந்தால்...

மாட்டிக் கொள்ளாத வரை...

ராஜு போன்ற திறமையான மனிதனை எந்த கூட்டமும் விடாது.

திறமைசாலிகள்  இல்லாத தன் கூட்டத்தில் ராஜு இல்லாதது ஜெகனுக்கு வலது கரம் ஒடிந்தது போல் இருக்கிறது.எப்படியாவது ராஜுவை இழுக்க முயற்சிகள் செய்கிறான்.ராஜுவுக்கு பல இன்னல்களை தருகிறான்.

 

...வறுமையில் தன் குடும்பம் தவிப்பதை கண்டு பெரும் துன்பமடையும் ராஜு ....

தன் பழைய வேஷத்துக்கு மாறுகிறார்.

 

கறுப்பு டி ஷர்ட் பேன்ட்டில் நடிகர்திலகம் வந்து நிற்கையில் 'வார்ர்ரேரே வா '...

விசில் கிளப்பும்.

எந்த திருடனையாவது வரவேற்போமா? ஆனால் இந்த திருடனுக்கு உண்டு.

அந்த 'ஸ்கார்ப் 'திருடனுக்கு ஒரு பிராண்டட் லோகோ போல் இருக்கும்.

துப்பாக்கியுடன் மேஜர் வீட்டில் வாதம் புரியும் காட்சிகள் படபடா பட்டாஸ்...

நிம்மதியாக உறங்கிய புலி மறு வேட்டைக்கு கிளம்பி விட்டது. 

அந்த திருடன் கெட்அப் போட்ட பின் நடிகர்திலகத்தின் காட்டும் ஆக்ரோச நடிப்பு மிரளவே வவைக்கும்.

மேஜருக்கு முன் கைத்துப்பாக்கியை சுழற்றும் ஸ்டைல் என்ன?

மேஜரை மிரட்டும் அந்த தோரணை என்ன?

 

'நான் இப்ப மனுஷன் இல்ல மிருகம்' என்று சொல்வதில் காட்டும் முரட்டுத்தனம் ,

'நீங்கள் விலகவில்லை என்றால்  நானே வழியை ஏற்படுத்திக் கொள்வேன் ',என்று சொல்லித் துப்பாக்கியை உயர்த்தி எச்சரிப்பதில் ,

என்று வரிசையாக வரும் அந்த நீள் காட்சி சுனாமியாய் அடித்து தூக்கும்.

 

திரைக்கதையில் சில லாஜிக் இருக்கிறது. அது இப்போது பார்ப்பதை வைத்து சொல்வது.அந்த காலகட்டத்தில் அப்போதைய ட்ரெண்டிங்கை வைத்து பார்க்க வேண்டும்.தொழில் நுட்பம் அதிகம் வளராத காலகட்டத்தில், நிறைய டீடெயில்களை மக்களும் எதிர் பார்த்ததில்லை.ஆனாலும் ,அந்தக்கால படங்களை பார்த்தவர்களுக்கு இப்படம் அதிக டீடெயில்களை கொண்டதாகவே இருக்கிறது.மேலும், 

எல்லாவற்றையும் நடிகர்திலகத்தின் நடிப்பு ஈடு செய்து விடுகிறது.அந்த நடிப்பு ட்ரெண்டிங் தான் எப்பவும் நெ:1.

 

ராஜுவை வைத்து இன்ஸ்பெக்டர் கேம் விளையாட்டை ஆரம்பிக்கிறார்.அது கொள்ளை கூட்டத்துக்குள்  ராஜுவை உள்ளனுப்பி அவர்களை பிடிப்பதுதான்.

 

படத்தின் இறுதி வடிவம் :

இரண்டு க்ளைமாக்ஸ்

ஒன்று ரயில் பைட்

இரண்டு டவர் பைட்.

80 களில் இருந்து இன்றுவரை வந்த ரயில்சண்டை காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் தொழில்நுட்ப வசதிகள் எப்படியெல்லாம் படம் பிடிக்க வசதிகளாக அமைந்திருக்கின்றன என்று வியப்பில் ஆழ்த்த வைக்கும்.

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக திருடனில் வரும் சண்டைக்காட்சி

அப்போதிருந்த தொழில் நுட்ப வசதிகளை வைத்து எப்படியெல்லாம்  எடுத்திருக்கிறார்கள்  என்பது பெரும் வியப்பாக இருக்கிறது.இப்போதே ஆச்சர்யமாக இருக்கும் இக்காட்சிகள் அப்போது  எந்தளவுக்கு மிரட்டலாக இருந்திருக்கும்.நடிகர்திலகத்தின் படங்கள் கதைஅம்சங்களை வைத்தே ஆனவை.சண்டைகாட்சிகள் இரண்டாம் பட்சம்தான்.குடும்பம் சோகம் வறுமை என்று நகரும் திரைக்கதையில் இந்த ரயில் சண்டை காட்சி மகா பிரமாண்டமே .ரயிலின் மேற்கூரையில் 

ஓடி வருவதும், எதிரிகளுடன் சண்டையிடுவது எல்லாம் மயிர்க்  கூச்செறியும் காட்சிகள்.

இரு ரயில் பெட்டிகளுக்கிடையே சண்டையிடுவதாக படம் பிடிக்கப்பட்டது டெக்னிகல் சவால்.

 

டவர்பைட்..

ஜம்ப் செய்து ஜம்ப் செய்து ஒரு புட்பால் ஷாட், எம்பி எம்பி ஒரு வெட்டு ..

சூப்பர் ஸ்பீடில் மூவ்மென்ட்கள்.

பாலாஜியையும் ராம்தாஸையும் புரட்டி எடுப்பார்.வேகம்.வேகம்.நடிகர்திலகத்தின் சண்டை காட்சிகளை பார்க்காதவர்கள் பார்க்கட்டும்.

 

இறுதியில் பரவசமாய் ,

எதிர்பார்ப்புக்கு மீறியே ரசனனையாயும் ,

எதிரிகளும் ரசிக்கும் படியும்,

எந்தவித ஏமாற்றமும் தராத,

விறுவிறுப்புக்கு பஞசமில்லாத,

கட்டுடல் கதாநாயகனாய்,

கவர்ச்சிகரமான ஸ்டைல் நடிப்பில்....

திருடன்..

வீரன் -விவேகானமானவன்...

 

நன்றி

செந்தில்வேல் சிவராஜ்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.