Breaking News :

Saturday, December 21
.

ரகுமானிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!!


இரவின் நிழல் விழாவில் மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த பார்த்திபன் ஏஆர் ரகுமான் முன்னாடியே மைக்கை தூக்கி எறிஞ்ச சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

பார்த்திபன் டைரக்ட் செஞ்சு  நடிச்ச ’இரவின் நிழல்’ என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேத்திக்கு நடந்துச்சு. 

இந்த விழாவின் போது ஏஆர் ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது மைக் வேலை செய்யலை.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், மைக்கை தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஏஆர் ரகுமான் தர்மசங்கடத்தில் இருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு மாற்று மைக் ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்து ஏஆர் ரகுமானுடன் உரையாடினார் .

இந் நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிச்சிக்கிட்டார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.