நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாடகர்
டி. எம். சௌந்தரராஜன் பின்னணி வழங்கும்போது, குரல் ஒற்றுமை இருவருக்குமிடையே
பாகுபடுத்த முடியாதபடி ஒத்து
பாடல்கள் ..
குறிப்பாக, நடிகர் திலகத்துக்காக, சௌந்தரராஜன் அவர்கள் பாடிய, தத்துவப் பாடல்கள் , சோகப் பாடல்களில் , இந்தப் பொருத்தம் அபரிமிதமான வகையில் அமைந்திருக்கும்.
"தூக்குத் தூக்கி" படத்தில் முதலில் டி.எம்.எஸ். அவர்கள், சிவாஜி அவர்களுக்காக பாடத் துவங்கினார். பின் கணக்கற்ற பாடல்கள், காலத்தை வென்று நிற்கும் காவியங்களாக மலர்ந்து, அன்றும், இன்றும், என்றும் , மணம் பரப்பி , மகிழ்வித்து வருகின்றன.
கீழே உள்ள பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.
உள்ளம் என்பது ஆமை( பார்த்தால் பசி தீரும்)
பாலும் பழமும் கைகளில் ஏந்தி( பாலும் பழமும்)
மலர்ந்தும் மலராத பாதி மலர் ( பாச மலர் )
எங்கே நிம்மதி (புதிய பறவை)
யார் அந்த நிலவு ( சாந்தி)
போனால் போகட்டும் போடா ( பாலும் பழமும்)
யாரடா மனிதன் இங்கே(லட்சுமி கல்யாணம்)
உன் கண்ணில் நீர் வழிந்தால்( வியட்நாம் வீடு)
அந்தநாள் ஞாபகம்( உயர்ந்த மனிதன்)
தேவனே என்னைப் பாருங்கள்( ஞான ஒளி)
யாரை நம்பி நான் பொறந்தேன்( எங்க ஊர் ராஜா)
சோதனை மேல் சோதனை( தங்கப் பதக்கம்)
யாருக்காக இது யாருக்காக( வசந்த மாளிகை)
வளர்த்த கடா முட்ட வந்தா( கல்தூண்)
அம்மம்மா தம்பி என்று நம்பி ( ராஜ பார்ட் ரங்கதுரை)
கண்கண்ட தெய்வமே( கீழ்வானம் சிவக்கும்)
ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன் தான் மனிதன்)
நீயும் நானுமா கண்ணா( கௌரவம்)
பல வயதான பாத்திரங்களில் சிவாஜி சார் நடித்துள்ளார். ஒவ்வொன்றிற்கும் வித்தியாசத்தை, வேறு வேறு குணாதிசயத்தை, அற்புதமாக, நடிப்பில் வெளிக் கொணர்ந்து, புதுப் புது உயரங்களைத் தொட்டிருப்பார். டி.எம்.எஸ். அவர்களும் , அவற்றை உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு விதமாக குரலில் துல்லிய வேறுபாட்டைக் காட்டியிருந்தாலும், எல்லாப் பாடல்களிலும், குரல் ஒற்றுமை, 100% இருப்பது, மாறாது
இவை மட்டுமல்ல, பாசம், அன்பு, பக்தி, கிண்டல், காதல் உணர்வுகள் கொண்ட வேறு வகையான பாடல்களிலும், நடிப்பவரும் , பாடுபவரும், ஒருவரே என்று நினைக்கத் தோன்றும் விதமாக, அம்சமாக பொருத்தம் , குரல் ஒற்றுமை, அமைந்து, நம்மை அசர வைக்கும்.
பாட்டும் நானே பாவமும் நானே ( திருவிளையாடல்)
வடிவேலும் மயிலும் துணை( அம்பிகாபதி)
யார் தருவார் இந்த அரியாசனம்( மகாகவி காளிதாஸ்)
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா( ஆலயமணி)
ஆறு மனமே ஆறு( ஆண்டவன் கட்டளை)
மலர்களிலே பல நிறம் கண்டேன்( திருமால் பெருமை)
நிலவைப் பார்த்து வானம் சொன்னது(சவாலே சமாளி)
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி( நெஞ்சிருக்கும் வரை)
மாதவிப் பொன் மயிலாள் ( இரு மலர்கள்)
அம்மாடி ஈ ஈ பொண்ணுக்குத் தங்க மனசு( ராமன் எத்தனை ராமனடி)
நான் உன்னை அழைக்கவில்லை( எங்கிருந்தோ வந்தாள்)
இசை கேட்டால் புவி அசைந்தாடும்( தவப் புதல்வன்)
புது நாடகத்தில் ஒரு நாயகி( ஊட்டி வரை உறவு)
ஐ வில் சிங் பார் யு( I will sing for you)(மனிதரில் மாணிக்கம்)
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா( என் மகன்)
சக்கை போடு போடு ராஜா( பாரத விலாஸ்)
(இதுவும் வசன கவிதை போல, காட்சியில், சிவாஜியும் அவர் மனமும், மாற்றி , மாற்றி கூறுவதை, பாடுவதை, டி.எம்.எஸ் . வழங்கிய விதம், அசத்தல் ரகம்)
ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி( அவன் தான் மனிதன்)
மேலும் பல பாடல்கள் , குரலுக்கும் நடிப்புக்கும் , மிகப் பொருத்தமாய் அமைந்து, சாதனை படைத்துள்ளன.
சரி, ஏதோ ஒரு பாட்டு தான் , கண்டிப்பாக சொல்ல வேண்டுமென்றால் , என் தேர்வில் முதலிடம் பெறுவது,
" அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற பாடல் தான். ஒரு வகை, வசன கவிதையாக இருப்பதில், குரல் ஒற்றுமை "பளார்" என்று கன்னத்தில் அடித்தாற் போல், தாக்கும்.
, காட்சி அமைப்பின் படி, சிவாஜி , மேஜர் சுந்தரராஜன், இருவரும் ஓடி வந்து , மூச்சு வாங்க நிற்கும் போது, டி.எம்.எஸ் குரலில், அச்சு அச்சாக அந்த விளைவை , உணர முடியும். பாடலில், மேஜர் அவர்கள் வசனமாக , அவர் குரலிலேயே பேச, சிவாஜி அவர்கள் பாடுவது, டி.எம்.எஸ். அவர்கள் குரலில் அமையும் போது, சிவாஜி சாரே பாடுவது போல்/பேசுவது போல் , நமக்கு தோன்றும்.
நன்றி: கூகுள்!