Breaking News :

Saturday, December 21
.

தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன்


இன்றைய பாடகர்களில் யார் பாடலை எழுதியது, எந்தப் பாடகர் பாடினார், பாடலின் வரிகள் என்னென்ன என்பவையெல்லாம் பெரிதாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. அப்போதெல்லாம் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படங்களே வந்திருக்கின்றன; வென்றிருக்கின்றன. இன்றைக்கு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இல்லை என்றும் இசையை முக்கிய அங்கமாகக் கொண்டு படங்கள் வருவதில்லை என்றெல்லாம் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை தான்.

 

 நம் தலைமுறைக்கு முன்பிருந்தே பாடியவர்களை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கூட ரசித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ‘ஆஹா... என்ன குரல்...’ என்று பாடகர்களை வியந்துகொண்டுதான் இன்னமும் இருக்கிறார்கள். அந்த ‘ஆஹா’ வுக்கும் ‘என்ன குரல்வளம்’ என்பதற்கும் உரிய பாடகர்களில் திருச்சி லோகநாதனும் முக்கியமானவர்!

 

ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு த்வனி உண்டு. நம்மில் சிலபேர் பேசுவதே ஏதோ கோபமாகப் பேசுவது போல் இருக்கும். இன்னும் சிலர் பேசுவது எப்போதுமே ரகசியமாக ஏதோ சொல்வது போல இருக்கும். இன்னும் சிலரின் குரல், ரகசியமாகவும் அல்லாமல் ஆர்டர் போடுவது போல் அல்லாமல் இருக்கும். பாடகர்களின் குரலில் இப்படியான மாற்றங்கள் இருக்கும். திருச்சி லோகநாதனின் குரல், வாழ்க்கை என்கிற மிகப்பெரிய பாடத்தை, கன்னத்தில் அறைந்து சொல்லித்தருவது போல் இருக்காது. செல்லமாகக் கன்னத்தை தட்டி, லேசாகக் காதை திருகி சொல்லித் தருவது போல் இருக்கும். வார்த்தைகளுக்கு வலிக்கக் கூடாது என்று பி.பி.எஸ்., ஏ.எம்.ராஜாவெல்லாம் பாடுவர்களே... அதேபோல, அந்த வார்த்தை குழந்தைகளை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவது போன்ற குரல், திருச்சி லோகநாதனுடையது!

 

இலவம் பஞ்சு, மென்மையானது என்பார்கள். லோகநாதனின் குரலும் பஞ்சுக்கு இணையானதுதான். ஒரு கோழியின் இறகு எடுத்து காது குடைந்த அனுபவம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். அப்படியொரு காது வருடல்... திருச்சி லோகநாதனின் குரல்!

 

இத்தனை பெருமைகள் கொண்ட திருச்சி லோகநாதன், இதற்காகவே தமிழ் சினிமாவில் தனித்தடம் பதித்திருக்கிறார். கூடுதலாக, சரித்திரத்தில் மிக முக்கியமானவராகவும் திகழ்கிறார். தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகர் எனும் பெருமையைக் கொண்டவர் திருச்சி லோகநாதன்!

 

இவர் பாடிய திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

 

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

 

மேலும் திருச்சி லோகநாதன் பாடிய பாடல்களில் சில :

 

கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)

 

ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)

 

அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)

 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)

 

உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)

 

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)

 

வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)

 

பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.